Header Ads

Header ADS

அங்கன்வாடி குழந்தைகளுக்கு எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகள் ஜனவரி 1 முதல் ஆங்கில வழிக்கல்வி வாயிலாக கற்றுத்தரப்படும் -பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்



அங்கன்வாடிகளை, பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தின் முதல்கட்டமாக, துவக்கப்பள்ளி அருகில் செயல்படும் அங்கன்வாடி மையம் குறித்து, தொடக்க கல்வித்துறை விபரம் சேகரிக்கிறது.

நடப்பு கல்வியாண்டு முதல், ஒற்றை இலக்க மாணவர்களை கொண்ட அங்கன்வாடி மையங்களை மூடி விட்டு, அங்கு படிக்கும் குழந்தைகளை, அருகில் உள்ள துவக்கப்பள்ளியில் சேர்க்க, அரசு ஆலோசித்து வருகிறது. 'இதை உறுதிப்படுத்த, அரசு துவக்கப்பள்ளிகளில், யு.கே.ஜி., எல்.கே.ஜி., பிரீ -கேஜி வகுப்பு துவக்கப்படும்' என, அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
 Related image
ஒவ்வொரு ஒன்றியத்திலும், துவக்கப்பள்ளியில் இருந்து, 2 - 4 கி.மீ.,க்குள் உள்ள அங்கன்வாடி மையம் குறித்த பட்டியல், தொடக்க கல்வித்துறை மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது.


அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு, ஜனவரி 1 முதல், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளாக, ஆங்கில வழிக்கல்வி கற்றுத்தரப்படும். ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, அடுத்தாண்டு நான்கு சீருடை வழங்கப்படும். ஒன்பது முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, டிச., மாதத்தில் கணினி மயமாக்கி, இன்டர்நெட் வசதி செய்யப்படும்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.