Header Ads

Header ADS

வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் - சத்துணவு சங்க கூட்டமைப்பு அறிவிப்பு



கஜா புயல் பாதிப்பு காரணமாக, 4ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன் வெளியிட்ட அறிக்கை:
 
காலமுறை ஊதியம் பெறாத சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம கடை நிலை ஊழியர்கள், பணியிழந்த மக்கள் நலப்பணியாளர், டேங்க் ஆபரேட்டர், பம்ப் பிட்டர், கிராம நூலகர், கிராம கோயில் பூசாரி ஆகியோருக்கு காலமுறை ஊதியமும், குறைந்தபட்ச ஊதியமும் கிடைக்கும் வரை வேலை நிறுத்த ேபாராட்டம் தொடரும் என்ற உத்தரவாதம் போராட்ட குழுவிடம் இல்லை. கஜா புயல் பாதிப்பு போன்ற காரணங்களினாலும் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்காது.

மேலும் அனைத்து மாவட்டங்களிலும் போராட்ட விளக்க கூட்டம் கூட்டமைப்பு சார்பாக வருகிற 2ம் தேதி நடைபெறும். கஜா புயல், இயற்கை சீற்றத்தினை கருத்தில் கொண்டு முதல்வர் சந்திப்பு இயக்கம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் முதல்வரை சந்திக்க தேதி, நேரம் ஒதுக்கீடு செய்து தருமாறு மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம்.
 
எங்களது கூட்டமைப்பு நிர்வாகிகளை முதல்வர் அழைத்து பேசாவிட்டால் திட்டமிட்டப்படி வருகிற 16ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். கஜா புயல் நிவாரணத்திற்கு கூட்டமைப்பில் உள்ள சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஒருநாள் ஊதியம் தர சம்மதிக்கிறோம். அதே சமயம் அரசு அதற்கான அரசாணையை வெளியிட வேண்டுகிறோம்.

கஜா புயல் நிவாரணத்திற்கு எங்களது கூட்டமைப்பு பணியாளர்கள் பொருட்களை சேகரித்து மாவட்ட வாரியாக மாவட்ட ஆட்சியர் மூலம் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு வரதராஜன் கூறியுள்ளார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.