ஆங்கில வழி மாணவர்கள் எவ்வளவு? ஸ்பெஷல் வகுப்பறை அமைக்க திட்டம் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, November 20, 2018

ஆங்கில வழி மாணவர்கள் எவ்வளவு? ஸ்பெஷல் வகுப்பறை அமைக்க திட்டம்


Image result for ஆங்கில வழி மாணவர்கள் எவ்வளவு? ஸ்பெஷல் வகுப்பறை அமைக்க திட்டம்

அரசுப்பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்த, மத்திய அரசுநிதி ஒதுக்கியதை தொடர்ந்து, ஆங்கில வழி மாணவர்களின் எண்ணிக்கை சேகரிக்கப்பட்டு வருகிறது.அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், ஆங்கில வழி கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, சேர்க்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆங்கில வழி மாணவர்களுக்கு, பத்தாம் வகுப்பு வரை, ஒரே வகுப்பறையில், தமிழ்வழி மாணவர்களுடன் அமர வைத்து,வகுப்பு கையாளப்படுகிறது
ஆனால்,மேல்நிலை வகுப்புகளில், இம்முறையை பின்பற்றுவதில் சிக்கல் உள்ளது.
 
இதனால், சில பள்ளிகள், பிளஸ் 1 வகுப்பில், ஆங்கில வழி துவங்காமல் உள்ளன. சேர்க்கை இருந்தும் வகுப்பறை இல்லாததால், ஆங்கில வழி பிரிவுக்கு பாடம் நடத்துவதில் சிரமம் நீடிக்கிறது.இதுசார்ந்து, சென்னையில் நடந்த கல்வி அதிகாரிகளுக்கான கூட்டத்தில், சமீபத்தில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழி சேர்க்கை குறித்த, விபரங்கள் மாவட்ட வாரியாக, சேகரிக்கப்பட்டு வருகின்றன

கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில்,' எட்டாம் வகுப்பு முதல், இருபது மாணவர்களுக்கு மேல் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு, பிரத்யேக வகுப்பறை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.மாவட்ட வாரியாக சேகரிக்கப்படும், தகவல் அடிப்படையில், நிதி ஒதுக்கி கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக, மாணவர் விபரங்களை விரைவில் அனுப்புமாறு, இயக்குனர் ராமேஸ்வரமுருகன் உத்தரவிட்டுள்ளார்' என்றனர்

No comments: