Header Ads

Header ADS

பான் கார்டு விண்ணப்பத்தில் புதிய திருத்தம்!


Image result for pan card
பான் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது தந்தையை விட்டுப் பிரிந்த
தாய் இருந்தால், விண்ணப்பதாரர் தந்தையின் பெயரைக் குறிப்பிடுவது

கட்டாயமல்ல என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது..

பணபரிவர்த்தனைகளை பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும் உருவாக்க மத்திய அரசு கொண்டு வந்தது தான் பான் கார்டு. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்எஸ்டிஎல் அமைப்பு இந்த பான் எண்ணை வழங்குகிறது. பான் கார்டு மூலம் கடன், முதலீடு, பண மதிப்பு கொண்ட வாங்கி விற்கும் நடவடிக்கைகள், வங்கி பணபரிவர்த்தனைகள் போன்ற அனைத்தையும் ஒரு கண்காணிப்பில் அரசு கொண்டு வருகிறது.
 
பான் கார்டு எண்ணை அடிக்கடி மாற்ற முடியாது. முகவரி மாறினாலும் நாட்டின் எந்த பகுதிக்கும் சென்றாலும் கூட பான் எண்ணை மாற்றிக்கொள்ளத் தேவையில்லை. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவில் பரிவர்த்தனையில் ஈடுபட்டாலும் பான் கார்டு அவசியமாகிறது.

பான் கார்டு விதிமுறைகளில் அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டு பயன்பாட்டு சிக்கல்களை தீர்க்க வழிவகை செய்யப்படுகிறது. இந்நிலையில்  பான் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது தந்தையை விட்டுப் பிரிந்த தாய் இருந்தால், விண்ணப்பதாரர் தந்தையின் பெயரைக் குறிப்பிடுவது கட்டாயமல்ல என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது...

இதுதொடர்பாக வருமான வரித் துறை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் விரும்பினால் தாய் பெயரைக் குறிப்பிடலாம் என்றும் இந்த விதிமுறை டிசம்பர் 5ஆம் தேதி அமலுக்கு வருவதாகவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது...

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.