அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள்: கல்வித் துறை புதிய உத்தரவு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, November 3, 2018

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள்: கல்வித் துறை புதிய உத்தரவு



அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் மாணவர் குறைவாக உள்ள இடங்களில் ஆசிரியர் பணியிடங்களை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் - ஆசிரியர் விகிதப்படி மாணவர் எண்ணிக்கையைவிட அதிக ஆசிரியர்கள் உள்ளனர். குறிப்பாக, 35 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் இருக்க வேண்டிய நிலையில் பல பள்ளிகளில், 35 மாணவர்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். இதையடுத்து, அதிகமாக உள்ள ஆசிரியர்கள், அங்கிருந்து மாற்றப்பட்டு, தேவை உள்ள பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர்.

ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுபோன்ற இடமாறுதல் செய்ய முடியவில்லை. எனவே, உபரியாக ஆசிரியர்கள் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் ஓய்வு பெறும்போது அந்தப் பணியிடங்களை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஓய்வு பெறுவோர் பணியிடத்தில் புதியவர்களை நியமிக்காமல் அரசிடம் ஒப்படைக்குமாறு மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்கக் கல்வி இயக்குநர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்

No comments: