கஜா புயலால் நிவாரணம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு நாள் ஊதியம் வழங்க ஜாக்டோ- ஜியோ முடிவு
கஜா
புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்காக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு
செய்துள்ளதாக ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் அறிவித்துள்ளார்.
திருவள்ளூரில் ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாவட்ட மாநாடு இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளா் மற்றும் ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் பேசுகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல், ஊராட்சி செயலாளர், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 21-மாத நிலுவைத் தொகையை உடனே வழங்குதல் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிச.4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளன.
இக்கூட்டம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு கூட்டம் நடத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் 26-ஆம் தேதி முதல், 30-ஆம் தேதி வரையில் வேலை நிறுத்த பிரசாரம் மேற்கொள்ளவும், 30-ஆம் தேதி தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும். அதற்குள் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லையென்றால் டிசம்பர் 4-ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவோம்.
மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியும் ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்கவும் இக்கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
No comments
Post a Comment