ஜாக்டோ-ஜியோவுடன் மற்ற சங்கங்கள் இணைப்பு? நாளை பேச்சுவார்த்தை துவக்கம்
ஜாக்டோ-ஜியோ அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற ‘கிராப்’ அமைப்பினர் உள்ளிட்ட 6 சங்கங்கள்
மீண்டும் ஜாக்ேடா-ஜியோவில் இணைந்து செயல்பட உள்ளன. இணைப்புக்கான சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை நாளை சென்னையில் நடக்கிறது.
ஜாக்டோ -ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் மற்றும் உயர்மட்டக் குழுக் கூட்டம் கடந்த மாதம் 28ம் தேதி சென்னையில் நடந்தது.நவம்பர் மாதம் 27ம் தேதி நடக்கும், தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்துவது தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும்,
ஜாக்டோ-ஜியோ அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற 10க்கும் மேற்பட்ட சங்கங்கள் மீண்டும் ஒன்றாக இணைந்து ஜாக்டோ-ஜியோவுடன் செயல்படப்போவதாக அழைப்பு விடுத்துள்ளன.
அது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பது குறித்தும் மேற்கண்ட கூட்டத்தில் தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.இணைப்பு தொடர்பாக
பேச்சுவார்த்தை மேற்கொள்ள ஒருங்கிணைப்பாளர்கள் மீனாட்சி சுந்தரம், செ.முத்துசாமி, மாயவன், மோசஸ், சுப்பிரமணியன், தியாகராஜன், இரா.தாஸ், வெங்கடேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரிந்து சென்ற குழுவினரிடம் நாளை பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
அதே
நாளில் ஒருங்கிணைப்பாளர் கூட்டமும், 10ம் தேதி உயர்மட்டக் குழு கூட்டம் ஜாக்டோ-ஜியோ சார்பில் நடக்கும். பிரிந்து சென்ற சங்கங்களின் சார்பில் ஆறுமுகம், வின்சென்ட், ரெங்கராஜன், செல்வராஜ், போலீஸ் துறையின் அமைப்புப் பணியாளர்சங்கம், ஜாக்டா, கிராப் அமைப்பினர் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள உள்ளனர். நாளை நடக்க உள்ள பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
No comments
Post a Comment