கவுரவ விரிவுரையாளர் பணி தேர்வு முடிவுகள் வெளியீடு
*கலை, அறிவியல் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்
பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல், உயர்கல்வி துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது*
*புதுச்சேரியில் தாகூர் கலை கல்லுாரி, பாரதிதாசன் மகளிர் கல்லுாரி, உள்ளிட்ட 6 அரசு கல்லுாரிகளிலும் காரைக்கால், மாகி, ஏனாம் கல்லுாரிகளிலும் பேராசிரியர் பணியிடம் அதிகளவில் காலியாக உள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது*
*இதன் எதிரொலியாக, உயர் கல்வித் துறை, அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்தது.கடந்த 4 மற்றும் 5ம் தேதியில் நேர்முக தேர்வில் 250 விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்*
*நேர்முகத் தேர்வுக்கான முடிவு, உயர் கல்வி துறையின் www.dhte.py.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பாட வாரியாக மொத்தம் 69 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்*
*சம்பளம் உயருமா?*
*அரசு கலை கல்லுாரிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள விரிவுரையாளர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது*
*இதனை உயர்த்த வேண்டும் என அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்*
*இதுகுறித்து அரசு பரிசீலித்து வருவதால், சம்பளம் உயர்வு தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்
No comments
Post a Comment