சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான விடைத்தாள்களை வெளியிட கோரிய மனுக்கள் தள்ளுபடி
சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான விடைத்தாளை (ஓஎம்ஆர் ஷீட்) வெளியிட கோரிய மனுக்கள் தள்ளுபடியானது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் லட்சுமிநாராயணபுரத்தை சேர்ந்த முத்துராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
எம்ஏ, எம்பில் முடித்துள்ளேன். தமிழகத்தில் காலியாக உள்ள உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் உள்ளிட்ட 1,325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 26.7.2017ல் வெளியானது. நான் விண்ணப்பித்து தேர்வில் பங்கேற்றேன். தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.
வெப்ைசட்டில் முடிவுகள் மட்டுமே வெளியிடப்பட்டன. விடைத்தாளோ (ஓஎம்ஆர்), மதிப்பெண் பட்டியலோ வெளியிடப்படவில்லை. முன்னதாக நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் விடைத்தாள் வெளியிடப்பட்டது. இந்தத்தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை. இதனால் பலரும் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, சிறப்பு ஆசிரியர் தேர்வில் பங்கேற்றவர்களின் ஓஎம்ஆர் சீட்டை வெப்சைட்டில் வெளியிட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதேபோல், பனையூரை ேசர்ந்த கருப்பசாமியும் மனு செய்திருந்தார். இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இதுபோன்ற விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்தார்.
No comments
Post a Comment