Header Ads

Header ADS

கவுரவ ஆசிரியர்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு




புதுச்சேரி அரசு பள்ளிகளில் காலியாக உள்ளபாலசேவிகா, பயிற்சி பெற்ற பட்டதாரிகள் (டி.ஜி.டி.,) , கம்ப்யூட்டர் பயிற்றுநர், விரிவுரையாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் கவுரவ ஆசிரியர்கள் என்ற பெயரில் நியமிக்க பள்ளி கல்வித்துறை விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
 
புதுச்சேரி அரசு பள்ளி கல்வித்துறையில் ஆரம்ப பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பாடங்கள் நடத்துவதில்சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கவுரவ ஆசிரியர்களை நியமித்து தற்காலிகமாக சமாளிக்க பள்ளிகல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இதற்கான அறிவிப்பு பள்ளி கல்வித் துறை இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.பிராந்திய ரீதியாக கவுரவபாலசேவிகா, பயிற்சி பெற்ற பட்டதாரிகள் (டி.ஜி.டி.,), கம்ப்யூட்டர்பயிற்றுநர், விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.அந்தந்த பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் அந்தந்த பிராந்தியத்தில் உள்ள காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். புதுச்சேரி பிராந்தியம்கவுரவ பாலசேவிகா:மொத்தம் 87 இடங்கள் காலியாக உள்ளது. பொது பிரிவு-44, எம்.பி.சி.,-15, .பி.சி.,-9, மீனவர்-2, முஸ்லிம்-2, எஸ்.சி.,-14, பழங்குடியினர்-1 என்ற அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

இந்த இடங்களுக்கு 18 வயது முதல் 30 வயதிற்குட்பட்டபெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பிளஸ் 2 தேர்ச்சியுடன், முன் மழலையர் படிப்பில் ஓராண்டு டிப்ளமோ படிப்பு அல்லது பால சேவிகா பயிற்சி சான்றிழ் முடித்திருக்க வேண்டும். 90 மதிப்பெண்களுக்கு போட்டி தேர்வு நடைபெறும். 10 மதிப்பெண்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்த சீனியாரிட்டி அடிப்படையில் அளிக்கப்படும். மாத சம்பளமாக 18 ஆயிரம் கிடைக்கும்.கவுரவ பயிற்சி பெற்ற பட்டதாரிகள் ஆசிரியர்பிரெஞ்சு -2, அறிவியல் -2, சமூக அறிவியல்-2 என 6 பயிற்சி பெற்ற பட்டதாரிகள் ஆசிரியர்இடங்கள் நிரப்பப்பட உள்ளது. பிரெஞ்சு ஆசிரியர்கள் பொறுத்தவரை பொது-1, .பி.சி.,-1 என்ற இட ஒதுக்கீடு அடிப்படையிலும், அறிவியல் ஆசிரியர்கள்பொது-1, .பி.சி.,-1 என்ற இட ஒதுக்கீடு அடிப்படையிலும், சமூக அறிவியல் ஆசிரியர் பணியிடங்கள் பொது-1, எஸ்,.சி.,1 அடிப்படையிலும் நிரப்பப்பட உள்ளது. அறிவியல், சமூக அறிவியல் ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க பிரெஞ்சு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

90 சதவீதமதிப்பெண்கள் ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண்ணும், 10 சதவீதம் வேலைவாய்ப்பு சீனியாரிட்டி அடிப்படையில், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். மாத சம்பளமாக 22 ஆயிரம் கிடைக்கும்.கவுரவ கணிப்பொறி பயிற்றுநர்பொது-5, .பி.சி.,-3, எஸ்.சி.,-2 என மொத்தம் 10 கணிப்பொறி பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ஒரு இடம் ஹரிசாண்டல் இட ஒதுக்கீடு உண்டு. மாத சம்பளமாக 25 ஆயிரம் ரூபாய் தரப்படும்.கவுரவ விரிவுரையாளர்இந்தி-1, கணிதம்-1, தாவரவியல்-1, விலங்கியல்-2, பொருளியல்-2, புவியியல்-1என மொத்தம் எட்டு விரிவுரையாளர் பணியிடங்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. மாத சம்பளமாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

காரைக்கால் பிராந்தியம்காரைக்காலில் 93 கவுரவ பாலசேவிகா பணியிடங்கள்,4 ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள், 21 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், 4 கணிப்பொறி பயிற்றுநர்கள், 23 விரிவுரையாளர்கள் பணியிடங்கள் இதே போல் நிரப்பப்பட உள்ளது. காரைக்காலில் குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.மாகி பிராந்தியம்இப்பிராந்தியதில் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள்-4, பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்-15, கணிப்பொறி பயிற்றுநர்கள்-2, கவுரவ விரிவுரையாளர்கள் 11 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.ஏனாம் பிராந்தியம்இப்பிராந்தியத்தில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்-22, கணிப்பொறி பயிற்றுநர்-2 , கவுரவ விரிவரையாளர்-3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

பள்ளி கல்வித் துறையின் ஒப்பந்த பணியிடங்களானகவுரவ பாலசேவிகா, பயிற்சி பெற்ற பட்டதாரிகள் (டி.ஜி.டி.,) , கம்ப்யூட்டர் பயிற்றுநர், விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தகவல் குறிப்பேடு http://schooledn.puducherry.gov.in மற்றும் http://schoolednpdyguesteacher.in என்ற இணையதளத்தில் கிடைக்கிறது. விண்ணப்பங்களை http://school ednpdyguesteacher.in என்ற இணையதளத்தில் ஆன்-லைனில் இம்மாதம் 26ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

புதுச்சேரி பட்டதாரிகள் கடும் எதிர்ப்புபுதுச்சேரி பள்ளி கல்வித் துறையில் பொதுவாக ஆசிரியர்கள் பணியிடங்கள் தேர்வு செய்யப் பட்டு, நேர்காணல் அடிப்படையில் விருப்பத்திற்கேற்ப காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவர். இப்போது முதல் முறையாக சென்டாக்கில் பிராந்திய இட ஒதுக்கீடு வழங்குவதை போன்று ஆசிரியர் பணியிடங்கள் பிராந்திய ரீதியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது இது புதுச்சேரி பொதுமக்கள், பட்டதாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.