Header Ads

Header ADS

ஊதிய முரண்பாடு களையாவிட்டால் தொடர் உண்ணாவிரதம்: இடைநிலை ஆசிரியர்கள் திட்டவட்டம்



ஆறாவது ஊதியக் குழுவின் மூலம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளை அரசு நீக்காவிட்டால் தொடர் உண்ணா விரதப்போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இது குறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கபொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது: தமிழகத்தில் இயங்கும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, 2009ம் ஆண்டு ஆறாவது ஊதியக் குழுவின் மூலம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது புதியதாக பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ரூ.3170 குறைவாக நிர்ணயிக்கப்பட்டது. அதாவது, 2009ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8370 என்றும் அந்த தேதிக்கு ஒருநாள் பிந்தைய நாளான 2009 ஜூன் 1ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 என்று அடிப்படை ஊதியத்தை நிர்ணயம் செய்தனர்.

இதன்படி வித்தியாசம் ரூ.3170 வருகிறது. இது எங்களுக்கு இழப்பு. இந்த முரண்பாடுகளை களைய பல்வேறு போராட்டங்களை நடத்தினோம்.  இதையடுத்து மீண்டும் மூன்றுகட்ட போராட்டங்களை நடத்துவது என்று முடிவு செய்தோம். இதன்படி சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரதம் நடத்தப்படுகிறது. இரண்டாம் கட்டமாக டிசம்பர் 4ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசு இந்த இரண்டு போராட்டங்களையும் கண்டுகொள்ளவில்லை என்றால் அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் மீண்டும் குடும்பத்துடன் தொடர் உண்ணாவிரதம் இருப்போம். அப்போது ரத்த தானம் செய்வது, உண்ணா விரதம் காரணமாக உடல்நிலை மோசமாகும் ஆசிரியர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்வது என்றும் முடிவு செய்துள்ளோம். எனவே, அரசு தலையிட்டு ஊதிய முரண்பாடுகளை களைய ஆணை பிறப்பிக்க வேண்டும்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.