செமஸ்டர் தேர்வில் அதிரடி மாற்றம்! இனி புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதலாம்! கொண்டாட்டத்தில் மாணவர்கள்!!
மாணவர்களின் மன அழுத்ததை குறைக்க, ஒரு சில பாடங்களை புத்தகத்தை
பார்த்து தேர்வு எழுதும் புதிய முறை விரைவில் அறிமுகமாக இருக்கிறது.
அண்மையில் நடந்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் தேர்வு சீர்திருத்தக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் மாணவர்களின் பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் குறிப்பாக மாணவர்களுடைய மன அழுத்தத்தை எவ்வாறு குறைப்பது போன்ற பல விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
அப்போது பொறியியல் மாணவர்களுக்கான ஒரு சில குறிப்பிட்ட பாடப்பிரிவுக்கு புத்தகங்களைப் பார்த்து தேர்வு எழுதும் புதிய திட்டத்தை அமல்படுத்துலாம் என ஆலோசிக்கப்பட்டது. மேலும் இந்த புதிய திட்டம் 3 ஆம் ஆண்டு மற்றும் 4 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே.
இந்த
புதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமான உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்பட்டவில்லை. எனவே இந்த புதிய திட்டம் அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என கல்வித்துறை வட்டரங்கள் தெரிவிக்கின்றன
No comments
Post a Comment