Header Ads

Header ADS

96 வயதில் 98 மார்க் எடுத்த பாட்டி ... குவியும் பாராட்டுகள்!



ஆலப்புழா: கேரள அரசின் அக்ஷரலக்ஷம் திட்டத்தின் கீழ் 96 வயதில் 4ம் வகுப்பு தேர்வு எழுதிய கார்த்தியாயினி அம்மா 98 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தள்ளாத வயதிலும் தளராமல் தேர்வெழுதி அதிக மதிப்பெண் பெற்றுள்ள கார்த்தியாயினிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன
கேரளாவை 100 சதவீதம் படிப்பறிவு பெற்ற மாநிலமாக மாற்றும் விதமாக அந்த மாநில அரசு ஜனவரி 26ம் தேதி அக்ஷரலக்ஷம் என்ற கல்வித் திட்டத்தை அறிவித்தது. வயது வித்தியாசமின்றி அனைவரும் படித்து தேர்வு எழுதி சான்றிதழ் பெறலாம் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம்

96 வயது கார்த்தியாயினி அம்மா இந்தத் தேர்வை எழுதி அதிக மதிப்பெண் பெற்று கல்விக்கு வயது என்றுமே தடையில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். EXPAND இன்றைக்கு கல்வி அனைவருக்கும் எளிதில் கிடைத்து விடுவது போல பழங்காலங்களில் கிடையாது. குடும்பச் சூழல், பெண்கல்விக்கு எதிராக இருந்த சமூக கட்டமைப்புகளும் இதற்கு முக்கிய காரணங்களாக இருந்தன. எனினும் 96 வயதில் தனக்கு படிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் கார்த்தியாயினி அம்மா.

 [பள்ளிக்கு போகாமல் பாட்டு பாடினாரா.. ஆசிரியை மீதான குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் பொய்!] 
விரும்பி படித்த கார்த்தியாயினி
விரும்பி படித்த கார்த்தியாயினி 

தினந்தோறும் தனது வீட்டிற்கே வந்து பாடம் எடுத்துச் சென்ற ஆசிரியரின் உதவியால் மலையாளம் எழுத படிக்க கற்றுக்கொண்டுள்ளார். மலையாளத்தில் எண்களை படிப்பது, வாய்ப்பாடுகளை சொல்வது என்று மிகவும் பிடித்து படித்துள்ளார் கார்த்தியாயினி. கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற்ற 4ம் வகுப்பு தேர்வையும் எழுதி இருந்தார்

மகிழ்ச்சியில் திளைக்கிறார் 
மகிழ்ச்சியில் திளைக்கிறார்
தேர்வு எழுதும் போது அவ்வளவு பதட்டமாக இருந்த கார்த்தியாயினி அம்மா தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சந்தோஷ வெள்ளத்தில் மிதக்கிறார். ஆம் 100க்கு 98 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார், தன்னுடன் தேர்வு எழுதியவர்கள் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி இருக்கிறார் கார்த்தியாயினி

கோயிலில் சுத்தம் செய்த பணியாளர் 
மொத்தம் 42,933 பேர் அக்ஷரலக்ஷம் திட்டத்தின் கீர் 4,7,10,11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். கோயில்களில் சுத்தம் செய்யும் பணி செய்து வந்த கார்த்தியாயினி 96 வயதில் தேர்வுக்காக தயாரானவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார். 96 வயதில் 98 மதிப்பெண் பெற்ற கார்த்தியாயினிக்கு அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயனே நேரில் சந்தித்து சான்றிதழை அளித்துள்ளார்

காப்பி அடிக்கவில்லை

ஊடகங்களின் வெளிச்சத்திற்கு வந்திருக்கும் கார்த்தியாயினி அம்மா மகிழ்ச்சியில் திளைக்கிறார். 98 மதிப்பெண் எடுத்தது மகிழ்ச்சியே எனினும் 100 மதிப்பெண் எடுக்க முடியவில்லையே என்று கவலைப்படும் கார்த்தியாயினி, தேர்வில் நான் யாரையும் பார்த்து எழுதவில்லை, என் விடைத்தாளை பக்கத்தில் அமர்ந்திருந்தவர்களுக்கு காட்டி அவர்கள் வெற்றி பெற உதவினேன் என்று கூறுகிறார்

மனமிருந்தால் மார்க்கமுண்டு

96 வயதில் பலருக்கு நினைவாற்றல் அவ்வளவாக இருக்காது, அவர்களுடைய வேலைகளையே அவர்களால் செய்ய முடியாது. நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்துவிடுவர் என்பதையெல்லாம் மாற்றி 96 வயதில் தேர்வு எழுதி அதிலும் 98 மதிப்பெண் எடுத்து அசத்திக்காட்டி இருக்கிறார் கார்த்தியாயினி அம்மா. மனமிருந்தால் மார்க்கமுண்டு என்று சொல்வார்களே அது இது தானோ


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.