கஜா புயல் எதிரொலி - 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு
கஜா
புயல், வரும் 15ஆம் தேதியன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை
சென்னை,
நவம்பர் 15-ஆம்
தேதி முற்பகலில் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயலானது தற்போது நாகைக்கு கடகிழக்கே 770 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது சென்னை - நாகை இடையே நவம்பர்-15 அன்று கரையை கடக்கும். இதன் கரணமாக நவம்பர் 14-ம் தேதி இரவு முதல் புயல் கரையை கடக்கும் வரை கனமழை பெய்யக் கூடும்.
ஜா புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் மணிக்கு 80-90 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசுக்கூடும். சில சமயங்களில் 100 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இந்த பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.
தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். கடல் அலையின் உயரம் இயல்பை விட ஒரு மீட்டர் அதிகமாக இருக்கும். மீனவர்கள் வரும் 15-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கஜா புயல், வரும் 15ஆம் தேதியன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்
8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு உள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் , விழுப்புரம், நாகை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய
8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. விரைவில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்
இதற்கான அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments
Post a Comment