8 ஜிபி ரேம் மற்றும் டூயல் டிஸ்பிளேயுடன் அறிமுகமானது நுபியா எக்ஸ்!
ZTE நிறுவனத்தின் துணை நிறுவனமான நுபியா, அதன் புதிய மாடலான நுபியா எக்ஸ் போனை சீனாவில் அறிமுகப்படுத்தியது
சீனாவில் நுபியா எக்ஸ் முன்பதிவு தொடங்கியது, வரும் 5ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.
துனுக்குகள்
சீனாவில் அறிமுகமானது நுபியா எக்ஸ்.
இதன்
விலையானது தோராயமாக ரூ.35,000 ஆகும். இதில் பெரும் சிறப்பம்சமே டூயல் டிஸ்பிளே தான்.
ZTE நிறுவனத்தின் துணை நிறுவனமான நுபியா, அதன் புதிய மாடலான நுபியா எக்ஸ் போனை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமே அதன் 6.26 இன்ச் கொண்ட மற்றம் 5.1 இன்ச் கொண்ட டூயல் டிஸ்பிளே தான். இந்த ஸ்மார்டபோனின் மற்றொரு முக்கிய சிறப்பம்சம் ஸ்னாப்டிராகன் 845, டூயல் கேமரா, மற்றும் 8 ஜிபி ரேம் உட்பட பல உள்ளன. இதில் முன் பக்கம் கேமராவும் இல்லை, நாட்ச் டிஸ்பிளேயும் இல்லை. டூயல் டிஸ்பிளே இருப்பதால் பின் பக்க கேமராவிலே செல்பி எடுத்துக்கொள்ளலாம். இந்த மொபைல் நான்கு கலர்களில் கிடைக்கிறது.
நுபியா எக்ஸ் விலை,
6 ஜிபி ரேம்/64ஜிபி நினைவகம் கொண்ட நுபியா எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலையானது ரூ.35,000 ஆகும். இது பிளாக் மற்றும் க்ரே வண்ணங்களுக்கு மட்டும். இதில் ப்ளூ நிற மாடல் விலையானது ரூ.36,000 ஆகும். 8 ஜிபி ரேம்/128 ஜிபி நினைவகம் கொண்ட நுபியா எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலையானது ரூ.39,200 ஆகும்.
இது
பிளாக், க்ரே மற்றும் கோல்ட் நிற மாடல்களுக்கு மட்டும். இதில் ப்ளூ நிற மாடலானது ரூ. 40,300 ஆகும். இதில் ப்ரிமியம் 8ஜிபி மற்றும் 256 நினைவகம் கொண்ட வேரியண்டின் விலை ரூ.44,500 ஆகும். இந்த நுபியா ஸ்மார்ட்போனின் முன்பதிவானது இன்று முதல் துவங்குகிறது. இதன் விற்பனையானது நவ.5 முதல் தொடங்குகிறது. இது சீன இணையதளங்களான டிமால், ஜெடி மற்றும் சன்னிங் உள்ளிட்ட தளங்களில் கிடைக்கிறது.
நுபியா எக்ஸ் சிறப்பம்சங்கள்,
டூயல் - சிம்
கொண்ட நுபியா எக்ஸ் ஸ்மார்ட்போனானது UI 6.0.2 சார்ந்தது ஆண்ட்ராய்டு 8.1 ஒரியோவில் இயங்குகிறது. 6.26 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே, 19:9 என்ற விகிதத்தில் பிரைமரி டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ்3 பாதுகாப்பு, 96 சதவீதம் NTSC கலர் கமட்டை கொண்டுள்ளது.
நுபியா எக்ஸ் 64 பிட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 SoC-யில் இயங்குகிறது. அட்ரீனோ 630 GPU உடன் இணைந்து 6ஜிபி மற்றும் 8ஜிபி LPDDR4X வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை கேமிரா உள்ளது. நுபியா எக்ஸ்-ல் 64ஜிபி, 128ஜிபி, 256ஜிபி ஸ்டோரேஜ் வசதிகள் உள்ளன.
No comments
Post a Comment