Header Ads

Header ADS

7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!


கஜா புயலால்  7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமானது வலுப்பெற்று புயலாக மாறியது.

இதற்கு கஜா என பெயரிடப்பட்டுள்ளது. அது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் வட தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. நாகைக்கு வடகிழக்கே 770 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது சென்னை - நாகை இடையே நவ.,15 அன்று கரையை கடக்கும். இதன் கராணமாக நவ.,14 ம் தேதி இரவு முதல் புயல் கரையை கடக்கும் வரை கனமழை பெய்யக் கூடும். கஜா புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் மணிக்கு 80-90 கி.மீ., வேகத்தில் காற்று வீசுக்கூடும்.

சில சமயங்களில் 100 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். இந்த பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இதனால் மீனவர்கள் யாரும் நவ. 15 வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியதுள்ளது.

 நாகை, கடலூர், காரைக்கால் மாவட்டங்களில் இயல்பை விட ஒரு மீட்டர் அளவுக்கு கடல் மட்டம் உயரக்கூடும். கஜா புயலால் சென்னைக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என தெரிவித்தார். சில இடங்களில் 20 செ.மீ., வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை மைய மண்டல இயக்குனர் பாலச்சந்திர கூறியுள்ளார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.