ஆன்லைன்: 5இல் ஒரு பொருள் போலி!
ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒரு பொருள் போலியானது என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
ஆன்லைனில் விற்கப்படும் பொருட்கள் குறித்து, லோக்கல் சரக்கள்ஸ்(Local Circles) என்ற இணையதளம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. சுமார் 30,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் ஆய்வறிக்கையானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில், கடந்த ஆறு மாதங்களில் ஆன்லைன் மூலம் போலியான பொருட்கள் தங்களிடம் விற்கப்பட்டதாக 20 சதவீத வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். எந்தெந்த ஆன்லைன் நிறுவனங்கள் போலியான பொருட்களை விற்பனை செய்கின்றன என்ற கேள்விக்கு ஸ்னாப்டீல் என 37 சதவீதமும் பிளிப்கார்ட் என 22 சதவீதமும், பேடிஎம் மால் என 21 சதவீதமும், அமேசான் என 20 சதவீத பேரும் புகார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக நறுமண மற்றும் ஒப்பனைப் பொருட்கள், விளையாட்டுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் பைகள்தான் அதிகளவில் போலியானவையாக இருக்கின்றன என இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments
Post a Comment