பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விடைத்தாள் நகல் பெறலாம்
புதுச்சேரி:பிளஸ் 2 துணை தேர்வு எழுதி, விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த தேர்வர்கள்,பெற்றுக்கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
செப்.,/அக்.,-2018, மேல்நிலை இரண்டாமாண்டு துணை தேர்வெழுதி விடைத்தாள் நகல் கோரிவிண்ணப்பித்த தேர்வர்கள், scan.tndge.in என்ற இணைய தளத்தில், தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல்- அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முவகரியில் 'application for
Retotallin/Revaluation' என்ற தலைப்பை கிளிக் செய்து, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து, நாளை (14ம் தேதி) காலை 10:00 மணி முதல் 15ம் தேதி மாலை 5:00 மணிக்குள், இணை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கான கட்டணத்தைஇணை இயக்குனர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும்.மறுமதிப்பீட்டிற்கு ஒரு தாள் கொண்ட பாடத்திற்கு ரூ.505, இரு தாள் கொண்ட பாடத்திற்கு ரூ.1010 (மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம்) செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு ஒரு தாள் கொண்ட பாடத்திற்கு ரூ. 205, இரு தாள் கொண்ட பாடத்திற்கு ரூ. 305 செலுத்த வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments
Post a Comment