11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் கல்லூரிக் கல்விச் சேர்க்கைக்குத் தேவையில்லை என்ற அரசாணை திருத்தம் செய்வது குறித்து அரசுப்பள்ளிப் பெற்றோர்களிடமோ, ஆசிரியர் அமைப்புகளிடமோ, அரசுப்பள்ளி மாணவர்களிடமோ அரசுத் தேர்வுகள் இயக்ககம் கருத்துக் கேட்பு நடத்தவில்லை RTI -NEWS - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, November 4, 2018

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் கல்லூரிக் கல்விச் சேர்க்கைக்குத் தேவையில்லை என்ற அரசாணை திருத்தம் செய்வது குறித்து அரசுப்பள்ளிப் பெற்றோர்களிடமோ, ஆசிரியர் அமைப்புகளிடமோ, அரசுப்பள்ளி மாணவர்களிடமோ அரசுத் தேர்வுகள் இயக்ககம் கருத்துக் கேட்பு நடத்தவில்லை RTI -NEWS


அரசாணை நிலை எண் 195, பள்ளிக் கல்வி (.தே)த் துறை நாள் 14-09-2018 தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அரசாணை (நிலை) எண் 100 நாள் 22-05-2017 இல் திருத்தம் செய்வது குறித்து அரசுப்பள்ளிப் பெற்றோர்களிடமோ, ஆசிரியர் அமைப்புகளிடமோ, அரசுப்பள்ளி மாணவர்களிடமோ அரசுத்

தேர்வுகள் இயக்ககம் கருத்துக் கேட்பு நடத்தவில்லை எனத் தகவல் உரிமைச் சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் பொதுத் தகவல் அளிக்கும் அலுவலர் பதில் அளித்துள்ளார். கருத்துக் கேட்பு நடத்தாமல் ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் முடிவை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அரசுக்குப் பரிந்துரைத்தது ஜனநாயக அரசாளுகை நெறிகளுக்கு எதிரானது.

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் கல்லூரிக் கல்விச் சேர்க்கைக்குத் தேவையில்லை என்ற நோக்கத்தில் பள்ளிக் கல்வித்துறை திருத்த அரசாணை வெளியிட்டது தனியார் பள்ளிகளின் அழுத்தம் காரணமாகவே நடந்துள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

கல்லூரிக் கல்வி உள்ளிட்ட உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுவதில் அரசுப்பள்ளி மாணவர்களை விட, தனியார் பள்ளி மாணவர்கள் அதிகமானோர் பயனடைய வழி செய்யும் திருத்த அரசாணையை பள்ளிக் கல்வித் துறை உடனே திரும்பப் பெறவேண்டும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறவதில் அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்க பள்ளிக் கல்வித் துறை வழி செய்யவேண்டும்.


Image may contain: text


No comments: