Header Ads

Header ADS

1 - 2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் கிடையாது


Image result for no homework

'பள்ளிகளில், 1 மற்றும் 2ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, வீட்டு பாடங்கள் தரக்கூடாது' என, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய அரசு அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் உள்ள, பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவு விவரம்:பள்ளி மாணவர்கள் எடுத்து வரும், நோட்டு,
புத்தகங்கள் உட்பட, 'பேக்'குகளின் எடை விஷயத்தில், அரசின் விதிகள் பின்பற்றப்பட வேண்டும். கூடுதல் புத்தகங்கள், பொருட்களை எடுத்து வரும்படி, மாணவர்களை நிர்ப்பந்திக்கக் கூடாது. 1 - 2 ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடங்கள் அளிக்க கூடாது.பள்ளிகளில், 1 - 2ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எடுத்து வரும், பாட புத்தகங்கள் அடங்கிய, 'பேக்'கின் எடை, 1.5 கிலோவுக்கு மேல் இருக்கக் கூடாது; 3 - 5ம் வகுப்பு மாணவர்களின், பேக் எடை, 2 அல்லது 3 கிலோ இருக்கலாம்;மேலும், 6 - 7ம் வகுப்பு
மாணவர்களின், பேக் எடை, 4 கிலோவுக்கு மேல் இருக்கக் கூடாது. 8 - 9ம் வகுப்பு மாணவர்களின் பேக் எடை, 4.5 கிலோவுக்கு மிகாமலும், 10ம் வகுப்பு மாணவர்களின் பேக் எடை, 5 கிலோவுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.பள்ளிகளில், 1 - 2ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மொழி, கணிதம் தவிர வேறு பாடங்களை பரிந்துரைக்கக் கூடாது. மேலும், 3 - 4ம் வகுப்பு மாணவர்களுக்கு, என்.சி..ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரைக்கும், மொழிப்பாடம், கணிதம், சுற்றுச்சூழலியல் பாடம் சொல்லி தரப்பட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.