TRB குளறுபடியால் TNPSC வழியே நியமனம் கல்வி துறை முடிவு!
அண்ணா நூலகம் உட்பட அரசு நூலகங்களில், புதிய பணியிடங்களை, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு வழியே நியமிக்க, பள்ளி கல்வித் துறை கடிதம் அளித்துள்ளது.
டி.ஆர்.பி.,யில் ஏற்பட்டுள்ள குளறுபடியால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.பணியிடங்கள்தமிழக பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வித் துறையில், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக மேற்கொள்ளப்படுகிறது.
நூலகர்கள் மற்றும் நூலகத் துறை பணியாளர்கள் தேர்வை, டி.ஆர்.பி., மேற்கொண்டு வந்தது. பள்ளி கல்வியில் ஊழியர்கள், உதவியாளர்கள் தேர்வு, அரசு தேர்வுத்துறையின் வழியாக நடத்தப்படுகிறது.
இந்நிலையில், அண்ணா நூலகம் மற்றும் பொது நூலக துறை நுாலகர்கள் பணியில், 50க்கும் மேற்பட்ட காலி இடங்களை நிரப்ப, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இந்த முறை, பணி நியமன நடவடிக்கைகளை, டி.ஆர்.பி.,க்கு பதில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வழியாக மேற்கொள்ள, முடிவுசெய்யப்பட்டுள்ளது
இதற்கான கடிதம், டி.என்.பி.எஸ்.சி.,க்கு அனுப்பப்பட்டுள்ளது
டி.ஆர்.பி.,யில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு குளறுபடி, சிறப்பாசிரியர் பணி நியமன பிரச்னை போன்றவற்றால், பெரும் சிக்கல் ஏற்பட்டுஉள்ளது.
எனவே,
தற்போதைய நிலையில், டி.ஆர்.பி., சார்பில் போட்டி தேர்வு நடத்துவதில், பல்வேறு
சிக்கல்கள் உள்ளதால் டி.என்.பி.எஸ்.சி., உதவியை, பள்ளிக்கல்வித் துறை நாடியுள்ளது.
No comments
Post a Comment