TNPSC - தமிழக வேளாண் துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள்
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தமிழக வேளாண் துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர், தோட்டக்கலை அதிகாரி போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது.
மொத்தம் 175 பேர்
தேர்வு செய்யப்படுகிறார்கள். உதவி இயக்குனர் பணிக்கு 74 இடங்களும், தோட்டக்கலை அதிகாரி பணிக்கு 101 இடங்களும் உள்ளன.இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
வயது
வரம்பு
விண்ணப்பதாரர் 1-7-2018-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், எம்.பி.சி., டி.சி., பி.சி. பி.சி.எம். மற்றும் விதவைப் பெண்மணிகள் போன்றோருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.
கல்வித்தகுதி
எம்.எஸ்சி. (தோட்டக்கலை) படிப்பு படித்தவர்கள் உதவி இயக்குனர் பணிக்கும், பி.எஸ்சி. தோட்டக்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் தோட்டக்கலை அதிகாரி பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்
விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.200 மற்றும் விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.150 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஒன்டைம் ரிஜிஸ்ட்ரேசன் முறையில் விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக் கட்டணம் மட்டும் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணத்தில் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. நெட்பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிடட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம். சில வங்கிகளின் மூலமாகவும் செலுத்த முடியும்.
தேர்வு செய்யும் முறை
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். சென்னை, மதுரை, கோவையில் மட்டும் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசிநாள் 21-11-2018-ந் தேதியாகும். வங்கி வழியே கட்டணம் செலுத்த கடைசிநாள் 23-11-2018-ந் தேதியாகும். இதற்கான தேர்வுகள் வருகிற ஜனவரி 12,13-ந் தேதிகளில் நடைபெறுகிறது.
இது
பற்றிய விரிவான விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
No comments
Post a Comment