TET, சிறப்பாசிரியர் தேர்வு, உள்ளிட்ட தேர்வுகளின் அறிவிப்புகள் வெளியிடாதது ஏன்? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, October 10, 2018

TET, சிறப்பாசிரியர் தேர்வு, உள்ளிட்ட தேர்வுகளின் அறிவிப்புகள் வெளியிடாதது ஏன்? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!



சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகடந்த ஓராண்டுக்கு முன்பு நடத்தப்பட்ட சிறப்பாசிரியர் தேர்வு, ஆசிரியர் தகுதித்தேர்வு உள் ளிட்ட தேர்வுகளின் அறிவிப்புகள் வெளியிடாதது குறித்து அமைச் சரிடம் கேட்டபோது, "சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 2 வாரத்தில் வெளியிடப்படும்.
 
தற்போது ஆசிரி யர் தேர்வு வாரியம் நடத்தும்தேர்வுகளில் மாணவர்களின் விடைத்தாள்கள் (ஓஎம்ஆர் ஷீட்) தனியார் நிறுவனங்கள் மூலமாகஸ்கேன் செய்து மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

 
அரசு பாலிடெக்னிக் தேர்வின்போது மதிப்பீட்டில் தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் இனிமேல் ஆசிரியர் தேர்வு வாரியமே சொந்தமான உரிய சாதனத்தை வாங்கி பணிகளை மேற் கொள்ளலாம் என முடிவு
செய்துள்ளோம்.

 இத்தகைய காரணங்களால் தான் தேர்வு முடிவுகளை வெளியிடவும் புதிய தேர்வுகளுக்கான அறிவிப்புகளை வெளியிடவும் காலதாமதம் ஆகிவிட்டது. விரைவில் புதிய தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும்" என்றார்

No comments: