School Morning Prayer Activities - 29.10.2018 - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, October 28, 2018

School Morning Prayer Activities - 29.10.2018



பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:74

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.

உரை:

அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.
பழமொழி :

Death keeps no calendar

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

பொன்மொழி:

நாமும் வாழ்ந்து,
பிறரையும் வாழ
வைப்பதுதான்
பொதுவான சட்டத்தின்
அடிப்படை.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.மோகன்தாஸ் காந்திக்குமகாத்மாஎன்ற பட்டம் அளித்த்தாக கூறப்படுபவர்?
ரவீந்திரநாத் தாகூர்

2.தாமிர தாது அதிகம் உள்ள மாநிலம்?
ராஜஸ்தான்

நீதிக்கதை


காகமும் நாய்க்குட்டியும் - நீதிக் கதைகள்

(Crow and Dog Moral Story)



ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள்.அந்த நாய்க் குட்டி காகத்துடன் நட்பாக இருந்தது. ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது. இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று.

என்ன காக்கையாரே! ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்? என்று கேட்டது.

அதற்கு காகம், மனிதர்கள் மற்றப் பறவைகளை அன்புடன் வளர்க்கின்றார்கள். அவைகளின் செயல்களைப் பாராட்டுகின்றார்கள் ஆனால் என்னை வெறுத்து. கல்லால் எறிந்து துரத்துகிறார்களே ஏன்? என்று கேட்டது காகம்.

இதற்குக் காரணம் உங்கள் தீய குணங்கள்தான். இதை நீங்கள் இல்லாது செய்தால் உங்களையும் அன்பாக நடத்துவார்கள், என்றது நாய்க் குட்டி

எங்களிடம் அப்படியென்ன தீய குணங்கள் உள்ளன? கடைமை, சுத்தம், இப்படிப் பல நல்ல குணங்களில் நாங்கள்தான் சிறந்தவர்கள்!என்று சொன்னது காகம்.


உண்மைதான்! என்றது நாய்க் குட்டி

பகிர்ந்துண்ணும் பண்பைக் கற்றுத்தந்ததும் நாங்கள்தான்! என்று பெருமையோடு சொன்னது காகம்.

ஆமாம் அதுவும் உண்மைதான்! என்று மறுபடியும் சொன்னது நாய்க்குட்டி.

இப்படி நல்ல குணங்கள் எம்மிடம் இருந்தும், மற்றப் பறவைகளுக்கு உள்ள மதிப்பு எங்களுக்கு இல்லையே ஏன்?

குயில் கூவும்போது அதன் இனிமையை இரசிக்கிறார்கள். மயிலாடும் போது அதை இரசித்துப் பாராட்டுகிறார்கள். கிளியை வீட்டில் வளர்த்து பேசக் கற்றுக் கொடுக்கிறார்கள்.அனால் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தும் எம்மினத்தைக் கண்டாலே துரத்துகிறார்களே ஏன்? என்று மீண்டும் கேட்டது காகம்.

ஏன் என்று நான் சொல்லுகிறேன். உங்களிடம் எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும். உங்களிடம் இருக்கும் சில தீய குணங்களால் தான் மனிதர்கள் உங்களை வெறுக்கிறார்கள், என்று கூறியது நாய்க்குட்டி

அப்படி என்ன தீய குணங்கள்? என்று கேட்டது காகம்.

திருடுதல், ஏமாற்றுதல், என்று சொன்னது நாய்க்குட்டி. காகம் தலை குனிந்தது.

நீதி: ஒருவரிடம் எவ்வளவு நல்ல பண்புகள் இருந்தாலும். அவரின் ஒரு சிறு தீயசெயல் அவரை, அவரின் அத்தனை நல்ல பண்புகளில் இருந்தும் மறைத்து அந்தத் தீயசெயலே முன்னிற்கும்.

இன்றைய செய்தி துளிகள்:

1.ஸ்டெர்லைட் ஆலை மூடல் எதிரொலி...... தூத்துக்குடியில் காற்று மாசு குறைந்துள்ளது: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை

2.தமிழகத்தில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

3.உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலி: சிவகாசியில் பட்டாசு விற்பனை மந்தம்

4.வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் உருவாகவில்லை: வானிலை மையம்

5.ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி: அரைஇறுதியில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது இந்தியா

No comments: