ஆசிரியர்களை நியமிக்காமல் வரும் ஆண்டுகளில் மேலும் பல புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம் - மாணவர்கள் நிலை???
தமிழகத்தில் மேல்நிலைப்பள்ளிகளில் 3 ஆயிரத்து 689 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் கற்பித்தல் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்போது அதில் ஆசிரியர்களுக்கான ஊதியமும் அடக்கம். மேல்நிலைக்கல்வி (பிளஸ்1, பிளஸ்2) மாணவர்களை உருவாக்கும் அடிப்படை பணித்தொகுதி ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் எண்ணிக்கை சேகரிக்கப்படுகிறது. அதன்படி தற்போது காலியக உள்ள பணியிடங்கள் 1672, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் இடம் 600, 800 கணினி ஆசிரியர்கள், மகப்பேறு விடுப்பில் உள்ள 647 பேர் என சுமார் 3689 ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை. இந்தப்பணியிடங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி துறையிடம் உள்ளது.
ஆயினும் அப்பணியிடங்களை கல்வியாண்டின் தொடக்கத்திலேயே நிரப்ப நடவடிக்கைஎடுக்காமல் 4 மாதம் முடிந்த நிலையில் ரூ.7500 தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 412 நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி கொடுப்பது,ஐஐடி, ஆடிட்டர் பயிற்சி போன்றவற்றிற்கு மாணவர்களை தயார் செய்ய உத்தரவிடப்படுகிறது. வெற்று விளம்பர அறிவிப்புகள் மாணவர்களுக்கு நல்லதல்ல. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுக்கு பிறகு வகுப்பு தொடங்கி ஒருவாரம் கடந்த பின்னரும் 2ம் தொகுதி வேதியியல், வரலாறு போன்ற புத்தகங்கள் வழங்கப்படவில்லை. பலமுறை வலியுறுத்தியும் ஆசிரியர் மாணவர் எண்ணிக்கையை கடைப்பிடிக்கவில்லை.
முக்கிய பாடங்களுக்கு தேவையான தனித்தனி ஆசிரியர்களை நியமிக்காமல் வரும் ஆண்டுகளில் மேலும் பல புதிய பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறுகின்றனர்.
No comments
Post a Comment