தமிழகத்தில் அதிகம் விளையும் நேந்திரம் பழத்தை கேரள மக்கள் ஏன் விரும்பி உண்கின்றனர் தெரியுமா?? - WELCOME TO TAMNEWS BLOG

My Blog List

My Blog List

SUBSCRIBE YOUTUBE

Tamil Nadu New Syllabus Text Books 2020-2021

Search This Blog

Saturday, October 27, 2018

தமிழகத்தில் அதிகம் விளையும் நேந்திரம் பழத்தை கேரள மக்கள் ஏன் விரும்பி உண்கின்றனர் தெரியுமா??நேந்திரப்பழம் கொஞ்சம் நல்ல வாசனையும், சுவையும் கொண்ட , அனைவராலும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு பழமாகும். இந்த நேந்திரம் பழம் தமிழகத்தில் அதிகம் விளைந்தாலும் இதன் மகத்துவத்தை அதிகம் உணர்ந்த கேரள மக்கள் மட்டுமே இந்த பழத்தை அதிகளவில் விரும்பி உண்கின்றனர்.
 
நேந்திரம் பழத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?
 
நேந்திரம் பழத்தை தினசரி சாப்பிட்டு வருவதனால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்க உதவுகிறது.

நினைவு ஆற்றலை அதிகபடுத்துகிறது.
TB நோய் தாக்குதலுக்கு உண்டானவர்கள் தினசரி நேந்திரம் பழம் ஒன்றும்,முட்டை ஒன்றும் தொடர்ந்து உண்டுவர இந்நோய் நீங்கி உடல் வலுபெறும்.

1 வயதிலிருந்து குழந்தைகளுக்கு நன்கு கனிந்த நேந்திரம் பழத்தை வேகவைத்து கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு நல்ல உடல்வளர்சியும்,ஊட்டச்த்தும் கிடைக்கும்நேந்திரம் பழம் உடற்பயிற்ச்சி செய்பவர்களுக்கு உகந்தது.
பழுத்த நேந்திரம் பழத்தையும்,மிளகு தூளையும் கலந்து இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
நேந்திரம் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதய தசைகள் வலுவடையும். தினமும் நேந்திரப்பழத்தை சாப்பிட்டு வருவதனால் இதய நோயிலிருந்து விடுபடலாம். இதயம் சீராக செயல்படுவதற்கு தேவையான அனைத்து சத்துக்களும் நேந்திரம் பழத்தில் உள்ளன.

நேந்திரம் பழத்தில் உடல் சூட்டினைக் குறைத்து குளிர்ச்சியை அதிகப்படுத்தும் சத்துக்கள் இருக்கின்றனஒல்லியானவர்கள் நேந்திரம் பழத்தை அவித்து சாப்பிடுவதனால் உடல் எடை நன்கு அதிகரிக்கும்.
நரம்புத் தளர்ச்சியைக் குணப்படுத்தும்.

நேந்திரம் பழத்தை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும்நேந்திரம் பழத்தை தினசரி உண்டு வருவதனால் சருமத்தைப் பாதுகாப்பதுடன்,சருமத்தைப் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ளும்.
நேந்திரம் பழம் நமது உடலுக்கு தேவையான பொட்டசியச் சத்தை அதிகம் கொண்டுள்ளது.

No comments:

TAM NEWS -MOBILE APP

DISTRICT WISE GOVT JOB

e-Learning. tnschool

கல்வி தொலைகாட்சி அட்டவணை

POLYTECHNIC ,ARTS AND SCIENCE ADMISSION

TAMNEWS -TELEGRAM LINK

ஷேர்சாட்

sharechat
�� ஷேர்சாட்-ல் உள்ள "TAMNEWS" குழுவில் இணையுங்கள்

Search This Blog

Post Top Ad