வயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்!!! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, October 8, 2018

வயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்!!!



வயிற்று உபாதைகள் நம்மை பாடாய்படுத்தும் ஒரு பிரச்சினை ஆகும். வயிற்றுவலி, மலச்சிக்கல், வீக்கம், வயிற்றுப்போக்கு என வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகள் ஏராளம். இதற்கு பலகாரணங்கள் உள்ளது. காலநிலை மாற்றம், உணவுகள் என வயிற்றில் சூட்டை கிளப்பும் காரணங்கள் பல உள்ளது.இந்த வயிற்று சூடானது உணவுகள் செரிப்பதில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்த வயிற்றின் வெப்பநிலை அதிகரிக்க குறிபிட்ட காரணம் என்று எதுவும் இல்லை. பொதுவாக காரமான உணவுகள், அதிகமாக சாப்பிடுவது, தாமதமாக சாப்பிடுவது, அதிக ஆல்கஹால் குடிப்பது, அதிக மாத்திரைகள் சாப்பிடுவது போன்றவை இதன் கரணங்கள் ஆகும். இதை குணமாக்கும் எளிய வழிகள் என்னவென்பதை பார்க்கலாம். வயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்
 
தயிர்; பெரும்பாலான பால் பொருட்கள் ஜீரணிப்பது கடினமானது. ஆனால் தயிர் சற்று எதிர்மறையான குணங்களை கொண்டது. இதில் உள்ள பல பண்புகள் உங்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கி வயிற்றின் சூட்டை குறைத்து செரிமானத்தை அதிகரிக்கிறது. இல்லையெனில் மோர் குடியுங்கள் அதுவும் நல்ல பலனைத்தரும். வயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்
 
குளிர்ந்த பால்குளிர்ந்தபால் வயிறு வெப்பநிலையை குறைப்பதோடு வயிற்றின் அமிலத்தன்மையை குறைக்கிறது.இதில் உள்ள சில பண்புகள் வெப்பத்தால் வயிற்றில் ஏற்படக்கூடிய அசௌகரியத்தை குறைக்கிறது. தினமும் குளிர்ந்த பாலை பச்சையாக குடிப்பது உங்களுக்கு சூட்டால் ஏற்படும் பிரச்சினையை குறைக்கிறது. வயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள் சாதம் வயிறு சூட்டின் அறிகுறிகளாக அசௌகரியத்தை தவிர வேறு எதுவும் உணரமுடியாது. இதற்கு சிறந்த மருந்து சாதமாகும். இது வயிற்று சூட்டை குறைத்து உடலில் நீரின் அளவைஅதிகரிக்கிறது. சாதத்தில் எந்தவித மசாலா பொருட்களையும் சேர்க்காதீர்கள். இதனை தயிருடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

மிளகுக்கீரை மற்றும் செவ்வந்திப்பூ போன்ற மூலிகைகள் வயிற்றுசூட்டை தணிக்க உதவும். இதற்கு காரணம் இவற்றின் குளிர்ச்சி பண்புகள்தான். மிளகுக்கீரை மற்றும் செவ்வந்திப்பூவை வைத்து தேநீர் தயாரித்து குடிப்பது உங்கள் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை குறைக்கும். நீர் உணவுகள்

சிட்ரிக் அமிலம் இல்லாத உணவுகள் மற்றும் பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். ஆப்பிள், வெள்ளரிக்காய், தர்பூசணி போன்ற பழங்களில் சிட்ரஸ் அமிலத்தின் அளவு குறைவாக இருப்பதுடன் நீர்சத்துக்களும் அதிகம் உள்ளது. இவை வயிற்றின் வெப்பநிலையை குறைப்பதுடன் செரிமானத்தையும் சீராக்குகிறது.அதிக தண்ணீர்

பல்வேறு விதமான உணவு பழக்கங்களால் ஏற்படும் வயிற்றுசூட்டை தணிக்க அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் நமது உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்ற உதவுவதுடன் செரிமான மண்டலத்தையும் சீராக்குகிறது.தேங்காய் நீர்

தேங்காய் நீர் அல்லது இளநீர் உடல் சூட்டை தணித்து வெப்பநிலையை சமநிலைப்படுத்த உதவுகிறது. இதற்கு காரணம் இதில் உள்ள அல்கலைன் ஆகும். இது மற்ற உணவுகளால் உருவாக்கப்பட்ட சூட்டை குறைக்கிறது .

No comments: