இளநரையை போக்க, முடி நீளமாக வளர டிப்ஸ்..!! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, October 14, 2018

இளநரையை போக்க, முடி நீளமாக வளர டிப்ஸ்..!!


நெல்லிக்காயும் கறிவேப்பிலையும் சேர்த்து சாப்பிடுவதால், கருகரு கூந்தலுக்கு கட்டாயம் நாங்க கேரன்டி. இளநரையையும் போக்கும் வலிமையுடையது. குறைந்தபட்சம் வாரத்திற்கு 2 அல்லது 3 முறையாவது "கறிவேப்பிலை நெல்லிப்பொடி " செய்து சாப்பிட வேண்டும்.
தேவையானவை:

பெரிய நெல்லிக்காய் - 10,
கறிவேப்பிலை (உருவியது) - ஒரு கப்,
காய்ந்த மிளகாய் - 10,
பெருங்காயம் - ஒரு கட்டி,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை:

நெல்லிக்காய்களை நன்கு கழுவித் துடைத்து, கொட்டைகளை மட்டும் நீக்கிவிட்டு நன்கு காயவைக்கவும் ( இது தான் நெல்லிமுள்ளி) . எண்ணெயைக் காயவைத்து, பெருங்காயத்தைப் பொரியவிட்டு எடுக்கவும்.

பிறகு, அதே எண்ணெயில் மிளகாயையும் வதக்கி, பின் அடுப்பை அணைத்துவிட்டு, கறிவேப்பிலையை அந்த சூட்டிலேயே போட்டுப் புரட்டி எடுத்துக்கொள்ளவும்.

காய்ந்திருக்கும் நெல்லிமுள்ளியை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு, மிளகாய், உப்பு, பெருங்காயத்தைப் போட்டு அரைத்து, கடைசியாக கறிவேப்பிலையையும் போட்டு அரைத்து கொள்ளவும்.


நல்ல வாசனையோடு இருக்கும் இந்தப் பொடியை, சூடான சாதத்தில் கலந்தோ அல்லது மோரில் கலக்கியோ சாப்பிடலாம். இப்படி சாப்பிட்டு வர கூந்தல் நன்றாக வளரும்.

No comments: