மொபைல் போன்களுக்குச் சிறப்பு ஆஃபர்! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, October 12, 2018

மொபைல் போன்களுக்குச் சிறப்பு ஆஃபர்!



பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஸ்மார்ட் போன்களுக்கு ஆன்லைன் விற்பனையில் சிறப்பு ஆஃபர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் பண்டிகைக் காலம் நெருங்கிக்கொண்டிருப்பதால் ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் ஆஃபர்களை அள்ளி வீசி வருகின்றன. குறிப்பாக ஸ்மார்ட் போன்கள் விற்பனைதான் இந்த ஆண்டு பண்டிகைக் காலம் நெருங்கும் முன்பே சூடுபிடித்துள்ளது. இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தகத் தளமான ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே  என்ற பெயரிலும், உலகின் முதன்மை ஆன்லைன் சில்லறை வர்த்தகத் தளமான அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்ட்டிவெல் சேல் என்ற பெயரிலும் விற்பனையை மேற்கொண்டு வருகின்றன.

வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக இரண்டு நிறுவனங்களும் ஸ்மார்ட் போன்களுக்கான ஆஃபர்களை அள்ளி வீசியிருக்கின்றன. எந்தெந்த மாடல் மொபைல் போன்கள் என்ன விலைக்கு விற்பனையாகிறது என்பதை தற்போது காணலாம்.



அசஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 (Asus ZenFone Max Pro M1) ஃப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.1000 விலை குறைக்கப்பட்டு ரூ.9,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மொபைல் போனானது 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி கொண்டது. இதில் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதிகொண்ட மாடலின் விலை ரூ.10,999 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரிஜினல் விலை ரூ.12,999 ஆகும். அதேபோல 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி கொண்ட மாடல் விலை ரூ.12,999ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரிஜினல் விலை ரூ.14,999 ஆகும்.



3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதிகொண்ட ரெட்மி 6 ப்ரோ (Redmi 6 Pro) மொபைல் போன் அமேசானில் ரூ.500 விலை குறைக்கப்பட்டு 10,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஒரிஜினல் விலை 11,499 ரூபாயாகும். அதுமட்டுமின்றி இந்த மொபைல் போனுக்கு அதிகபட்சமாக ரூ.9,899 வரையிலான எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் அளிக்கப்பட்டுள்ளது.



நோக்கியோ 5.1 பிளஸ் (Nokia 5.1 Plus) ஸ்மார்ட் போன் இந்தியச் சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.13,199. ஃப்ளிப்கார்ட்டில் இதன் விலை ரூ.10,499 மட்டுமே. நோக்கியோ 6.1 ப்ளஸ் (Nokia 5.1 Plus) மாடல் 14,999 ரூபாயாக விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரிஜினல் விலை 17,600 ரூபாயாகும்.



க்ஷியோமி எம்ஐ 2 (Xiaomi Mi A2)வின் ஒரிஜினல் விலை ரூ.17,499. ஆனால், அமேசான் ஆஃபரில் தற்போது 14,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் வசதிகொண்ட ஓப்போ எஃப்9 (Oppo F9) மாடலின் ஒரிஜினல் விலை ரூ.21,990. ஆனால் ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே  விற்பனையில் இதன் விலை ரூ.18,990.



இதுபோல பட்ஜெட் விலை முதல், விலையுயர்ந்த மாடல்கள் வரை பல்வேறு ஸ்மார்ட் போன்களுக்கும் ஆஃபர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு பண்டிகைக் கால விற்பனையில் மற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையைக் காட்டிலும் ஸ்மார்ட் போன்கள் விற்பனையே முன்னணியில் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: