முளைத்த பூண்டு நச்சுத்தன்மை கொண்டதா? அதை சாப்பிடலாமா? - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, October 8, 2018

முளைத்த பூண்டு நச்சுத்தன்மை கொண்டதா? அதை சாப்பிடலாமா?



முளைத்த உருளை நச்சுத்தன்மை கொண்டது. அதே போல முளைத்த பூண்டு நச்சுத்தன்மை கொண்டதா? அதை சாப்பிடலாமா?

முளைத்த பூண்டு விஷத்தன்மையற்றது என்றாலும் அது சாதரண பூண்டின் சுவையை விட வேறுபட்டு இருக்கும். இதனால் உணவின் சுவை கசப்பாக இருக்கும்.
 
முளைத்த பூண்டை அப்படியே பயன்படுத்துவதை விட, அதில் முளைத்த பகுதிகளை வெட்டி பயன்படுத்துவது சிறந்தது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறிய அளவில் முளைத்த பூண்டை பயன்படுத்தினாலும், அது மொத்தமாக உணவின் சுவையை மாற்றிவிடும்.

பூண்டு ஆன்டிபாக்டீரியல், ஆன்டிபங்கல், மற்றும் மிகச்சிறந்த ஆன்டிஆக்ஸிடண்டாகவும் பயன்படுகிறது. தவிர, இதில் வைட்டமின் -பி, சி, கால்சியம் உள்ளிட்டவை அதிகளவில் உள்ளது.


பச்சையாக பூண்டை சாப்பிடுவதால், இதய நோய்கள், பக்கவாதம், கேன்சர், மற்றும் பல நோய்கள் வராமல் தடுப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது

No comments: