கரடிகள் தாக்கி ஆசிரியர் காயம் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, October 26, 2018

கரடிகள் தாக்கி ஆசிரியர் காயம்



கோத்தகிரி, கோத்தகிரி அருகே, கரடிகள் ஆக்ரோஷமாக தாக்கியதில், படுகாயம் அடைந்த ஆசிரியர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.நீலகிரி மாவட்டம், கீழ்கோத்தகிரி வனச்சரகத்துக்கு உட்பட்ட, சோலுார்மட்டம் சகாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ், 48; தனியார் பள்ளி ஆசிரியர். நேற்று காலை, 6:30 மணிக்கு 
சோலுார்மட்டம் சாலையில் அமைந்துள்ள கோழிமரஹாடாவில், தன் தேயிலை தோட்டத்துக்கு நடராஜ் சென்றுள்ளார். அப்போது, தோட்டத்தில் இருந்த, இரண்டு கரடிகள், திடீரென வெளியேறி, நடராஜை தாக்கியுள்ளன.இதில், நடராஜின் கை, கால் மற்றும் வயிறு பகுதியில், பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர், சத்தம்போட்டதால், அருகில் இருந்தவர்கள், கரடிகளை கல்வீசி துரத்தினர். கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு 
பரிந்துரைக்கப்பட்டார்.சோலுார்மட்டம் போலீசார் விசாரிக்கின்றனர். வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்து, கரடி நடமாட்டத்தை உறுதி செய்தனர். கோத்தகிரி பகுதியில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், தொத்தமுக்கை பகுதியைச் சேர்ந்த தம்பதி, கரடி தாக்கியதில் உயிரிழந்தனர். இதே போல, சுற்றுப்புற பகுதியில், 10க்கும் மேற்பட்டோர், கரடி தாக்கி, காயமடைந்து உள்ளனர்.

No comments: