முதுநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் திடீர் சிக்கல் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, October 8, 2018

முதுநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் திடீர் சிக்கல்



அரசு பள்ளிகளில், பணி நியமனத்தின் போதே, ஊதிய உயர்வு கோரிக்கை எழுந்துள்ளதால், 1,400 ஆசிரியர்களை நியமிப்பதில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளில், காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், தினசரி ஊதியம், சிறப்பு தொகுப்பூதியம் என, பல ஊதிய முறைகளில், ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தொகுப்பூதியங்களில் நியமிக்கப்படுவோர், பணிக்கு சேர்ந்த சில ஆண்டுகளில், சங்கமாக உருவாகி, பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தும் நிலை உள்ளது. இந்நிலையில், தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலை பள்ளிகளில், பாடம் நடத்த, 11 பாடங்களுக்கு, 1,400 ஆசிரியர்களை நியமிக்க, பள்ளி கல்வித்துறை செயலகம் அனுமதி அளித்துள்ளது. காலியிடம் உள்ள பள்ளிகளில், பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக, மாதம், 7,500 ரூபாய் தொகுப்பூதியத்தில், முதுநிலை ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க, தலைமை ஆசிரியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இந்த பணி நியமனம் துவங்கியுள்ள நிலையில், பணிக்கு சேர்ந்தவர்களும், ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், ஊதிய உயர்வு கோரிக்கையை எழுப்பியுள்ளனர். பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு மாதம், 7,700 ரூபாய் சம்பளம் தரும் போது, முதுநிலை ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம், 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என, 'வாட்ஸ் ஆப்' வழியாக பிரசாரம் துவக்கியுள்ளனர்.
இந்த நிலை நீடித்தால், புதிய ஆசிரியர்கள் பணிக்கு சேர்ந்த சில மாதங்களில், ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக, பள்ளி கல்வி அதிகாரிகளுக்கு தகவல்கள் வந்துள்ளன. எனவே, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

No comments: