அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழ் வழி பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி அறிமுகம் செய்ய கோரி வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
அரசு
மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றனவா? என்ற விவரத்தை தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழ் வழி பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி அறிமுகம் செய்ய கோரியும், மழலையர் வகுப்புகளை துவங்க கோரியும் திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுததார்.
தமிழக அரசு கல்விக்காக ஆண்டு தோறும், 27 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டும், அரசு பள்ளிகளில் படிக்கும் பல மாணவர்கள் ஆங்கில பேச்சு திறன் இல்லாத காரணத்தால், தொழிற்கல்விகளில் சேர்வது, நல்ல பணி வாய்ப்பு கிடைப்பதில் சிரமம் இருப்பதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த
மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி போன்ற மழலையர் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளதாகவும், அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அதுகுறித்த விவரங்களை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்
No comments
Post a Comment