Header Ads

Header ADS

இனி வீட்டு பாடம் கிடையாது…மீறினால் பள்ளிகளே கிடையாது… அரசு எச்சரிக்கை !..





அனைத்து மாநிலத்திலும் இனி 2ஆம் வகுப்புவரை வீட்டு பாடம் கிடையாது மீறினால் பள்ளியின் அங்கீகாரம் இரத்து செய்யப்படும் மத்திய அரசு சுற்றறிக்கை

பள்ளி பருவத்தில் சேர்க்கப்படுகின்ற குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் என்ற பெயரில் குழந்தைகளின் மனதுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் செயல்பட்டுவந்தன.இந்த நிலையில் இன்று மத்திய அரசு அனைத்து மாநில பள்ளிக்கல்வித்துறை செயலகத்துக்கு சுற்றறிக்கை அனுப்பியது.அந்த சுற்றைக்கையில் பள்ளிகூடங்களில் இனிமேல் இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வீட்டு பாடம் கொடுக்க கூடாது.அதை மீறி குழந்தைகளுக்கு வீட்டுபாடம் கொடுத்தால் சம்மந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரம் இரத்து செய்யப்படும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த உத்தரவை பின்பற்றும் வகையில்  இனிமேல் பள்ளிக்கூடங்களில் இரண்டாம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது.இல்லையென்றால் அந்தந்த மாநில பள்ளிக்கல்வித்துறை செயலாளர்கள் நேரில்  ஆஜராக வேண்டி இருக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த சுற்றறிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சார்பில் அனுப்படட்டது குறிப்பிடத்தக்கது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.