Header Ads

Header ADS

ஏடிஎம்மில் ரசீது வந்தது.. பணம் வரவில்லை.. நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!



ஏடிஎம்மில் பணம் எடுத்ததாக ரசீது மட்டுமே வந்தது, பணம் வரவில்லை என தொடரப்பட்ட வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பிறகு நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கர்நாடகாவின் சிக்கபலபுராவில் உள்ள அரசு உதவிப் பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சந்திரகலா. இவர் அதே பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்துள்ளார்.

2014ம் ஆண்டு மே மாதம் தனது டெபிட் கார்டு மூலம் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் ஒன்றில் ரூ. 25 ஆயிரம் பணத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார். ஏடிஎம் மில் இருந்து பணம் எண்ணப்படுவதற்கான சத்தம் மட்டும் வந்த நிலையில் பணம் வரவில்லை. உடனடியாக வந்த ஏடிஎம் ரசீதில் அவர் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டதாக தகவலும் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரகலா அடுத்த நாள் வங்கி மேலாளரை அணுகியுள்ளார். வங்கி மேலாளரின் அறிவுரைப்படை எஸ்பிஐயின் இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகாரும் தெரிவித்துள்ளார்.


 
இதனையடுத்து பணம் மீண்டும் உங்களது கணக்கில் வந்து சேருமென்று வங்கி அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். ஆனால் 45 நாட்கள் கடந்த நிலையில் பணம் வராததால் மீண்டும் சிவாஜிநகரில் உள்ள பிராந்திய மேலாளரை அணுகி முறையிட்டுள்ளார். 5 மாதங்கள் கடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் வங்கி கணக்கின் படி உங்களது பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற தகவல் மட்டும் வங்கியில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து காவல்நிலையத்தில் புகார் அளித்த சந்திரலகா, பெங்களூருவில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தையும் அணுகியுள்ளார். வங்கி பரிவர்த்தனையின் படி சந்திரலகாவின் பணம் முறையாக எடுக்கப்பட்டுவிட்டது என்றும் வங்கி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். கிட்டத்தட்ட 4 வருடங்கள் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில் தனது ஆதாரங்களான வங்கி பரிவர்த்தனை ரசீதுகள், ஏடிஎம்மில் தான் பணம் எடுக்க முயற்சி செய்த அன்று ஏடிஎம் சரிசெய்யப்பட்டதற்கான சிசிடிவி காட்சி அனைத்தையும் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளார்.



இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிமன்றம் சந்திரலகா பணம் எடுத்த போது பதிவான சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியது. அதன்படி 'சந்திரலகா பணத்தை எடுக்க முயற்சித்தும் பணம் வெளிவரவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவரின் கணக்கிற்கு தொடர்புடைய வங்கி ரூ.25 ஆயிரத்தை வழங்க வேண்டும். மேலும் அவருடைய வழக்கு செலவுகளுக்கு கூடுதலாக ரூ.10 ஆயிரத்தையும் வழங்க வேண்டும்' என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.