``இனிமே `அனிதா’க்கள் சாகக் கூடாதுனு போராடுற எனக்கு என்ன பரிசு கிடைக்குது தெரியுமா?!’’ - சபரிமாலா - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, October 22, 2018

``இனிமே `அனிதா’க்கள் சாகக் கூடாதுனு போராடுற எனக்கு என்ன பரிசு கிடைக்குது தெரியுமா?!’’ - சபரிமாலா



துரை.வேம்பையன் துரை.வேம்பையன்  

சபரிமாலா, `இலக்கு 2040.... அனிதா கல்விச் சீர்திருத்தச் சட்டம்' என்ற கோரிக்கையை முன்வைத்து, தமிழகம் முழுதும் விழிப்பு உணர்வு பரப்புரையாற்றி வருகிறார்.
``இனிமே `அனிதாக்கள் சாகக் கூடாதுனு போராடுற எனக்கு என்ன பரிசு கிடைக்குது தெரியுமா?!’’ - சபரிமாலா
``இனிமே `அனிதா’க்கள் சாகக் கூடாதுனு போராடுற எனக்கு என்ன பரிசு கிடைக்குது தெரியுமா?!’’ - சபரிமாலா
நீட் தேர்வை எதிர்த்துப் போராடியவர், அரியலூர் மாணவி அனிதா. இறுதியில் அவர், மருத்துவக் கனவு நிறைவேறாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்காக அரசியல் கட்சியினர், மாணவர் அமைப்பினர் எனப் பலரும் குரல்கொடுத்தனர். குறிப்பாக, திண்டிவனத்தைச் சேர்ந்த ஆசிரியை சபரிமாலா, ``அனிதாபோல் இனி யாரும் நீட் தேர்வுக்காக இறக்கக் கூடாது. அதற்கு இந்தியா முழுக்க ஒற்றைக் கல்விச் சட்டம் கொண்டுவர வேண்டும்" என்று குரல்கொடுத்ததுடன், ஆசிரியர் பணியையே துறந்தார்.
 
தற்போது சபரிமாலா, `இலக்கு 2040.... அனிதா கல்விச் சீர்திருத்தச் சட்டம்' என்ற கோரிக்கையை முன்வைத்து, தமிழகம் முழுதும் விழிப்பு உணர்வு பரப்புரையாற்றி வருகிறார். இந்த நிலையில், கரூர் மாவட்ட நீதிமன்றம் எதிரில் டாக்டர் அனிதா என்ற பெயரில் வழக்கறிஞர் சதீசு என்பவர் நிறுவியுள்ள தட்டச்சுத் தொழிலகத்தைத் திறக்கவந்த சபரிமாலாவிடம் பேசினோம்...

சபரிமாலா
சபரிமாலா

``நீட் தேர்வைக் கண்டித்து அரியலூர் மாணவி அனிதா தற்கொலை பண்ணிகிட்டது எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. நாம அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைக் கனவுகாணச் சொல்லிக்கிட்டு இருக்கோம். ஆனா, நிஜத்துல கல்வி முறை இப்படி அனிதா கனவைச் சிதைச்சதோடு அவளையே கொன்னுட்டதேனு கொதிச்சுப் போனேன். இதையடுத்து, `ஒற்றைக் கல்விச் சட்ட முறை'யை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடத்த அனுமதி கேட்டேன். எதிர்ப்புதான் வந்துச்சு. கல்வித் துறை அதிகாரிகள் கண்டபடி பேசினாங்க. 65,000 சம்பளம் வந்த அரசு வேலையைக் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் உதறினேன். இதனால என்னை எல்லாரும் அவதூறா பேசினாங்க. அதெல்லாம் என்னைப் பாதிக்கலை. பெரியாரையும், அம்பேத்கரையும் எனக்குள் பாய்ச்சிய எங்கப்பாவே, `தப்பு பண்ணிட்டியே'னு 10 நாளா என்கூடப் பேசலை. அவரை பெரும்பாடுபட்டுதான் சமாதானப்படுத்தினேன். நான் ஈஸியா வேலையை ரிசைன் பண்ணிட்டேன். ஆனா, அதனால நடைமுறையில பெரும் பிரச்னைகள் ஏற்பட்டிச்சு. அதனால, என்னுடைய தேவைகளைப் பெரும்பாலும் குறைச்சுக்கிட்டேன்.


அனிதாவுக்குப் பிறகு செஞ்சி பக்கமுள்ள பெருவளூரைச் சேர்ந்த பிரதீபா நீட்டுக்காக இறந்துபோனார். அதுவும் எனக்குப் பெரும் அதிர்ச்சியா இருந்திச்சி. எவ்வளவு வறுமையிலும், தங்கள் கஷ்டங்களை மீறிப் படித்த இருவரும் ப்ளஸ் டூவில் நிறைய மதிப்பெண் எடுத்தனர். ஆனாலும், நீட் என்னும் அரக்கனால அவர்கள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டதை நினைச்சி வேதனைப்பட்டேன். `இனி நீட்டுக்காக ஓர் உயிரையும் இழக்கவிடக் கூடாது'னு என்னை இன்னும் உறுதியாக்கிக்கிட்டேன். 1 லட்சம் ரூபாய் செலவு செய்து `22 ஆசிரியர்களும்... இரண்டு மாணவிகளும்'  என்கிற தலைப்பில ஒரு புத்தகம் எழுதினேன். அதுல 22 ஆசிரியர்களாக அம்பேத்கர், பெரியார், பகத்சிங், வேலுநாச்சியார், அன்னை தெரசா எனப் பல வரலாற்று ஆளுமைகளைப் பற்றிக் குறிப்பிட்டேன். இரண்டு மாணவிகளாக அனிதா மற்றும் பிரதீபாவைக் குறிப்பிட்டு எழுதினேன். அதாவது, மாணவர்கள் இந்த 22 ஆசிரியர்கள் அனுபவித்த போராட்ட, புறக்கணிப்பு களங்களைப் படிக்க நேர்ந்தா, அனிதா, பிரதீபாபோல் சாகமாட்டீர்கள். தடைகளைத் தகர்க்கப் போராடவே செய்வீர்கள்' என்பது குறித்தான விழிப்பு உணர்வைக் கருத்தை அதுல புகுத்தினேன். அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சியையொட்டி, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் படிச்ச திருச்சி செயின் ஜோசப் கல்லூரியில இந்தப் புத்தகத்தை வெளியிட்டேன். அந்தப் புத்தகங்களை தமிழ்நாடு முழுக்க மாணவர்களிடம் சேர்த்துக்கிட்டு இருக்கேன்.

சபரிமாலா

நீட் சம்பந்தமாகப் பெரிய அளவில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள், கருத்துரிமை மாநாடுகளுக்கு யாரும் என்னை அழைப்பதில்லை. சின்னச் சின்ன அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்குத்தான் கூப்புடுறாங்க. `நீட் பிரச்னை தீர வேண்டுமானால் கல்வி முறையை, மாநிலப் பட்டியலில் சேர்க்கணும்; தமிழ்வழிக் கல்விக்கு வித்திடணும்' என்று பலரும் சொல்றாங்க. ஆனா, அப்படிச் செய்தாகூட இந்தப் பிரச்னை ஒழியாது. ஏழை பிள்ளைங்க ஸ்டேட் போர்டில் படிக்குறாங்க; அதைவிடக் கொஞ்சம் வசதியான பிள்ளைங்க மெட்ரிக் பள்ளிகளில் படிக்கிறாங்க. இன்னும் கொஞ்சம் வசதியான வீட்டுப் பிள்ளைங்க சி.பி.எஸ்.. பள்ளிகளிலும், அதைவிட வசதியானவங்க .ஜி.சி.எஸ். பள்ளிகளிலும் படிக்கிறாங்க. இன்னும் வசதியானவங்க அயல்நாட்டு கல்வி முறை கொண்ட பள்ளிகளில் படிக்கிறாங்க. இன்னும் பலர் நவோதயா பள்ளிகளில் படிக்கிறாங்க. இந்தியக் கல்வி முறைகள் இப்படி ஆறு கூறுகளாகப் பிரிஞ்சிருக்கு. இப்படி, எல்லா நிலையிலும் படிக்கும் மாணவர்களால, நீட் தேர்வை எப்படி எதிர்கொண்டு வெல்ல முடியும்?.
 
சபரிமாலா எழுதிய புத்தகம்
சபரிமாலா எழுதிய புத்தகம்
அதனால, இந்தியா முழுக்க உள்ள கல்வியாளர்களை, ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்துப் பேசி, `இந்த 6 கல்வி முறைகளிலும் சிறந்த ஒரே ஒரு கல்வி முறையை மட்டும் தேர்ந்தெடுத்து, அதில் ஒற்றைக் கல்வி முறையை மட்டும் இந்தியா முழுக்க அமல்படுத்தணும். அப்போ நீட் மட்டுமல்ல... நீட்டைவிடக் கடினமான தேர்வு வேறு எதுவானாலும் அதை, கிராமத்து அனிதாக்கள் தைரியமாக எதிர்கொள்வார்கள். இதைத்தான், நான் எல்லா மேடைகளிலும் முன்வைத்துப் பேசி வருகிறேன். இதற்காக, `அனிதா சட்டச் சீர்திருத்தம் கொண்டு வரணும்' என்று போராடிக்கிட்டு இருக்கேன். இதற்காக, `இலக்கு 2040' என்ற கோஷத்தோடு வேகமா இயங்கிகிட்டு இருக்கேன். `அதை அடையுற வரைக்கும் எந்தப் பெரிய அமைப்புக் கொடுக்கும் விருதுகளையும் நான் வாங்குறதில்லை'னு வைராக்கியமாக இருக்குறேன். ஆனா, என்னைத் திட்டமிட்டு இந்த அரசும், அமைப்புகளும், சமூகமும் புறக்கணிக்குது; உதாசீனப்படுத்துது; எள்ளி நகையாடுது. அரசுப் பள்ளி மாணவர்களை முன்புபோல் என் நிகழ்ச்சிகளில் பேச அனுமதிப்பதில்லை. கல்லூரி சென்றுவிட்ட முன்னாள் அரசுப் பள்ளி மாணவர்கள்தாம் என்னோடு பேச முன் வர்றாங்க. இந்த அரசு, என்னைத் திட்டமிட்டே `இந்தச் சமூகத்துக்கு எதிரானவள்'னு கட்டமைக்குது. நான் அதுக்கெல்லாம் பயப்படலை. என் கணவர் ஜெயகாந்தன் என்னை நம்புறார்; என்னைத் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துறார். இந்த நிலைமையிலும்,12 ஏழைக் கல்லூரி மாணவர்களுக்குப் பணம் கட்ட, தனது சம்பளத்திலிருந்து நான் கேட்கும் பணத்தைத் தருகிறார். அதுபோதும், இனி நீட்டுக்காகப் பயந்து ஒரு பிள்ளையையும் சாகவிடமாட்டேன்" என்றார் அழுத்தமாக!
 
நீட்டுக்கு எதிராக சபரிமாலாவின் குரல் ஓங்கியே ஒலிக்கிறது.

No comments: