Header Ads

Header ADS

கொழுப்பை வேகமாக கரைக்க உதவும் எளிய வழிமுறை!



தொப்பைக்கு பொதுவான காரணம் உடலில் சேரும் கொழுப்பு தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், அந்த கொழுப்பை கரைக்க நாம் முன்னெடுக்க முயற்சிகள் மிகவும் குறைவு. நம்மாளுங்க.. ஆயிரம் ஆயிரமா கொண்டு போய் கொட்டி, அறுவை சிகிச்சை செய்தாச்சும் கொழுப்பை குறைக்க பார்ப்பாங்க.. ஆனா, வாக்கிங், ஜாக்கிங், உடற்பயிற்சியை மட்டும் செய்ய மாட்டங்க. அவ்ளோ சோம்பேறி ஆயிட்டோம்!.
 
அதுசரி! அப்புறம் எப்படித் தான் கொழுப்பை குறைக்குறது? கண்டிப்பாக கடினமான உடற்பயிற்சி மூலமாக தான் அதை செய்ய முடியும். அதேசமயம், சில உணவு முறைகளை கடைபிடிக்கும் பொழுது, மென்மேலும் கொழுப்பு உருவாவதை தவிர்க்க முடியும்.
அப்படி ஒரு உணவு முறை தான் மஞ்சள் பால்.

இதன் மூலம், கொழுப்புகளை நம்மால் கரைக்க முடியும்.
 
ஒரு கிளாஸ் பாலில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்தால் மஞ்சள் பால் தயார். இதனை தினமும் ஒரு நேரம் மட்டுமே குடிக்க வேண்டும். மஞ்சள் சேர்த்த பிறகு பாலை சூடேற்ற கூடாது. முன்னதாகவே பாலை சூடாக்கி வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் சேர்க்கவேண்டும்.

மஞ்சளில் இருக்கும் மினரல்ஸ்கள் வயிற்றில் சேரும் அதிகப்படியான கொழுப்பினை கரைக்க கூடியது. இதனால் தொப்பை ஏற்படுவது தவிர்க்கப்படும். வெள்ளை அடிபோஸ் என்ற திசுவில் தான் அதிகப்படியான கொழுப்பு படிகிறது. மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற தாது இந்த வெள்ளை அடிபோஸில் தங்கியிருக்கும் கொழுப்பினை கரைக்க உதவுகிறது. அதோடு உடலில் மற்ற பாகங்களில் சேர்ந்திருக்கும் கொழுப்பினையும் கரைக்கச் செய்கிறது. மஞ்சளில் இருக்கும் சத்துக்கள் கொழுப்பை கரைத்து உடலில் triglyceride அளவை சமமாக வைத்திருக்க உதவுகிறது.

மஞ்சள் பால் பாக்டீரியாவுக்கு எதிராக போராடும் ஆற்றல் கொண்டது. இதனால் உடலில் தாக்கியிருக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸுக்கு எதிராக போராடும். குறிப்பாக சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் அதனை போக்க மஞ்சள் பால் குடிக்கலாம்.
மஞ்சள் பால் வயிறு தொடர்பான கோளாறுகளை போக்குவதில் முதன்மையானது. குறிப்பாக அல்சர். உணவு ஒவ்வாமை, உணவு செரிக்காததால் ஏற்படும் பாதிப்புகளை நீக்க மஞ்சள் பால் உதவுகிறது.

வாழ்க்கைக்கு தூக்கம் என்பது மிகவும் அவசியமானது. சரியாக தூக்கம் இல்லாததால் மன அழுத்தம் தொடங்கி உடல் எடைப் பிரச்சனை வரை ஏற்படுகிறது. மஞ்சள் பால் நன்றாக தூக்கம் வரச் செய்திடும். காரணம், அதிலிருக்கும் அமினோ அமிலம் , ட்ரைடோபான்(tryptophan) தான். தினமும் தூங்கச் செல்வதற்கு முன்னால் ஒரு கிளாஸ் பால் குடித்து வர நன்றாக தூக்கம் வரும்.

ஆக, இவ்வளவு நல்ல விஷயங்கள் மஞ்சள் பாலில், அதாவது மஞ்சளில் உள்ளது. கொஞ்சம் ட்ரை பண்ணித் தான் பாருங்களேன்!.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.