தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேரம் அறிவிப்பு
தமிழகத்தில் எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்பது குறித்து உச்சநீதிமன்றம் புதிய உத்தரவை அளித்துள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 6-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பட்டாசுகளை தயாரிக்கவோ விற்பனை செய்யவோ, வெடிக்கவோ தடை இல்லை என தீர்ப்பளித்தது.
ஆனால் பட்டாசுகளை தயாரிக்கவும் வெடிக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது
இந்த தீர்ப்பில் திருத்தம்கொண்டு வர கோரி தமிழக அரசு சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவினை விசாரித்த உச்சநீதிமன்றம் தீபாவளி அன்று காலை ஒரு மணிநேரமும் , மாலை ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி காலை 4 மணி முதல் 5 மணி வரையும், இரவில் 9 மணி முதல் 10 வரை பட்டாசு வெடிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், விதிகள் கண்காணிக்கப்படுகிறதா எனபதை கலெக்டர் முதல் விஏஓ வரை கண்காணிக்க வேண்டும். விதிகள் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்திரவிட்டுள்ளது
No comments
Post a Comment