விபத்தில்லாத தீபாவளி பள்ளிகளுக்கு அறிவுரை!
பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கும் முறைகள் குறித்து, பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்ட, பள்ளி கல்விஇயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
விபத்தில்லாத தீபாவளி பள்ளிகளுக்கு அறிவுரைதீபாவளி பண்டிகை, வரும், 6ம் தேதி, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, குழந்தைகள், பட்டாசு வெடித்து, கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்நிலையில், பட்டாசு வெடிக்கும்போது விபத்துகள் இன்றி, பாதுகாப்பாக இருக்க, மாணவர்களுக்கு, பள்ளிக் கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, பள்ளி கல்விஇயக்குனர், ராமேஸ்வர முருகன், அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:
* விபத்தில்லா, மகிழ்ச்சி நிறைந்த தீபாவளி கொண்டாட, மாணவ - மாணவியருக்கு, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.
* தளர்வான ஆடை மற்றும் எளிதில் தீப்பற்றும்ஆடை அணிந்து, பட்டாசு வெடிக்கக் கூடாது
* பட்டாசை கையில்வைத்தோ, உடலுக்கு அருகிலோ வெடிக்க வேண்டாம். பாதுகாப்பான தொலைவில் வைத்தே வெடியுங்கள்.
* மூடிய பெட்டி, பாட்டில்களில், பட்டாசுவெடிக்க கூடாது. குடிசை உள்ள பகுதிகளில், ராக்கெட்டுகளை வெடிக்க கூடாது
* குழந்தைகள் தனியாக நின்று, பட்டாசு வெடிக்க கூடாது.பெற்றோரின் துணையுடன், வெடிக்க வேண்டும்.
* அதிக சப்தமான பட்டாசு வேண்டாம்.
* விலங்குகளையோ, வேறு யாரையுமோ துன்புறுத்தும் வகையில், பட்டாசு வெடிக்க கூடாது
No comments
Post a Comment