வலிப்பு வந்தால் செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் வலிப்பு நோய் வர வாய்ப்பு இருக்கிறது. ஒரு சில வலிப்பு நோய்கள் பரம்பரையாகவும் வருகிறது. வலிப்பு நோய் என்றால் மூளையில் உள்ள நரம்பு செல்களில் ஏற்படும் மின் அலை மாற்றங்களால் மூளையின் அனைத்து பாகங்களும் ஒருமுகமாக ஒரே நேரத்தில் இயங்குவதால் வலிப்பு நோய் ஏற்படுகிறது என்பது மருத்துவ நிபுணர்கள் கூறும் தகவல் ஆகும்.
வலிப்பு வந்தால் செய்ய வேண்டியவைகள்:
வலிப்பு வந்த உடன் பாதிக்கப்பட்டவரை உடனடியாக இடதுபக்கம் திரும்பி படுக்க வைக்க வேண்டும். பற்க்களை கடித்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நன்கு காற்றோட்டமான இடத்தில் படுக்க வைக்க வேண்டும். மூச்சு விடவும் மூச்சை இழுக்கவும் எந்தவிதத் தொந்தரவும் இல்லாதபடிப் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
தலைக்கு மெத்தை போன்ற பொருட்களை வைத்து தலையில் அடிபடாமல் பார்த்துக் கொள்வதும், இறுக்கமான உடை அணிந்திருந்தால் தளர்த்தி விடுவதும், எந்த நேரத்தில் வலிப்பு வந்தது மற்றும் எவ்வளவு நேரம் நீடித்தது என்பதை குறித்துக் கொள்ளவேண்டும். கண்ட உணவுப் பொருட்களும் கொடுக்கக்கூடாது.
அடையாள அட்டை ஏதேனும் இருப்பின் அவற்றின் மூலம் உறவினரை தொடர்பு கொள்ளுதல். வலிப்பு வந்தவரின் கையையோ அல்லது உடலையும் அழுத்திப் பிடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
மருத்துவ சிகிச்சை:
முடிந்தவரை எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாகக் கொண்டுச் செல்வது நல்லது. மேலும் டாக்டர்கள் சொல்லும் பொழுது மட்டும் மருந்து மாத்திரைகளை நோயாளிகள் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் டாக்டர்கள் சொல்லும் மாத்திரை மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
வலிப்பு வரவில்லை என்று மருந்து மாத்திரைகளை பாதியில் நிறுத்திவிட்டால் எப்பொழுது வேண்டுமானாலும் வலிப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எப்பொழுது மருத்துவர் மருந்து மாத்திரைகளை உண்பதை நிறுத்தச் சொல்கிறாரோ அப்பொழுது தான் நிறுத்த வேண்டும்.
வலிப்பு உள்ளவர்கள் செய்யக்கூடாதவை
வலிப்பு நோயாளிகள் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். நீச்சல் அடிப்பதை தவிர்க்கவேண்டும்.
Third party
image reference
உயரமான இடங்களில் நிற்பதை தவிர்க்க வேண்டும். அதிகம் பதற்றமடையகூடாது.
No comments
Post a Comment