Header Ads

Header ADS

தமிழகத்திற்கு பிறப்பிக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! வானிலை மையம் அறிவிப்பு


சென்னை: தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என்று தமிழக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய, கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 7ம் தேதியான நாளை, இந்த மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சில தினங்களுக்கு முன்பாக அறிவித்திருந்தது.


எச்சரிக்கை .
ரெட் அலர்ட் .
இதையடுத்து ரெட் அலர்ட் எனப்படும் அதிக மழைக்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டதால் அந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில், வானிலை மையத்தின் அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.



பேட்டி
பாலச்சந்திரன்

சென்னையில், இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த பாலச்சந்திரன், மேற்கண்ட மாவட்டங்களில் கடும் மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தார்.


மழை
மழை இருக்கும்

அதேநேரம் வரும் எட்டாம் தேதி வரை தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும், பீதியூட்டும் வகையில் அவை இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

மழை மட்டும்
மேற்கே செல்கிறது

அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து புயலாக மாறியுள்ளதாகவும், அது ஏமனை நோக்கி செல்வதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார். ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், மக்கள் பீதியில் இருந்து இயல்புநிலைக்கு திரும்பியுள்ளனர்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.