அதிகமாகவே வரி கட்டியிருக்கிறேன் என்று ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லையா... உஷார்: நோட்டீஸ் வரும் முதலில்; அடுத்து பாயும் வழக்கு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, October 25, 2018

அதிகமாகவே வரி கட்டியிருக்கிறேன் என்று ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லையா... உஷார்: நோட்டீஸ் வரும் முதலில்; அடுத்து பாயும் வழக்கு



புதுடெல்லி: வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லை என்றால் விரைவில் நோட்டீஸ் வரும். அதற்கு சரியான பதில் தராவிட்டால், அடுத்து சட்டப்படி வழக்கு பாயும். வருமான வரி ரிடர்ன் தாக்கல் செய்ய வேண்டிய கெடு முடிந்து விட்டது. இன்னும் சிலர் வழக்கம் போல ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லை. ‘எனக்கு ரீபண்ட் வரும் அளவுக்கு வரி கட்டியிருக்கிறேன் என்று கண்டுகொள்ளாமலும் சிலர் ரிட்டர்ன் தாக்கல் செய்யாமல் இருந்து விட்டனர். அப்படி இருந்தால் சிக்கல் தான். சமீபத்திய டெல்லி ஐகோர்ட் தீர்ப்பின் படி, வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வது மிக முக்கியம். ரீபண்ட் வரும் என்று தெரிந்து ரிட்டர்ன் தாக்கல் செய்யாமல் இருக்கலாம் என்று நினைத்தால் அது தவறு. ரிட்டர்ன் தாக்கல் செய்யாவிட்டால் சட்டப்படி தண்டனை அளிக்கலாம் என்று உறுதி செய்துள்ளது. டெல்லியில் உள்ள ஒருவர் கடந்த 2003-04 மற்றும் 2005 - 06 ம் ஆண்டுகளுக்கான ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லை.
 
ஏன் ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லை என்று வருமான வரித்துறை அவருக்கு நோட்டீஸ் அளித்தது. அதற்கும் அவர் பதில் அனுப்பவில்லை. நேரிலும் போய் விளக்கம் சொல்லவில்லை. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரி, அவர் மீது சட்டப்படி நடவடிக்ைக எடுத்தார். டெல்லியில் கீழ்கோர்ட்டில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. ‘இரு ஆண்டுகள் நான் ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லை என்று கூறினாலும், அதிகமாகவே நான் வரி செலுத்தியுள்ளேன். எனக்கு தான் வருமான வரித்துறை ரீபண்ட் தர வேண்டும்; அதனால் வருமான வரித்துறைக்கு கோர்ட் உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார். ஆனால், கோர்ட் அவர் வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் கோரிக்கையை  நிராகரித்த கோர்ட், வருமான வரி சட்டப்படி மனுதாரருக்கு உரிய அபராதம் விதிக்கப்படலாம் என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார் மனுதாரர். டெல்லி ஐகோர்ட் விசாரித்து, சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் நெறிமுறையை சுட்டிக்காட்டியது. மனுதாரர் வாதம் போதுமான அளவில் இல்லை. அவர் வருமான வரி, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, அதிகமாகவே கட்டியிருக்கிறார். ரீபண்ட் வரும் அளவுக்கு கட்டியிருப்பதாக அவர் கூறுகிறார். ஆனால், வரி செலுத்துவதற்கும் ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கும் தொடர்பில்லை. கண்டிப்பாக ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை விதிகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் படி,  அவர் ரிட்டர்ன் தாக்கல் செய்யாதது தவறு என்று கூறியது.  
 
மேலும், இந்த வழக்கில்,  சம்பந்தப்பட்ட நிறுவனம் ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லை. ஆனால்  வரி கட்டி விட்டது. இருந்தும், ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லை என்பதால் அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளது சுப்ரீம் கோர்ட். அதன்படி, மனுதாரர் வழக்கிலும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பொருந்தும். அதனால் மனுதாரர்  அப்பீல் நிராகரிக்கப்படுகிறதுஎன்று டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இதனால், இந்தாண்டு ரிட்டர்ன் தாக்கல் செய்யாதவர்கள் பட்டியலை வருமான வரித்துறை எடுத்து வருகிறது.  வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யாதவர்களுக்கு நோட்டீஸ் பறக்கும். அதற்கு உரிய விளக்கத்தை தந்து விட்டால் அபராதத்தில் இருந்து தப்பிக்கலாம். இல்லாவிட்டால் சிக்கல் தான் என்று வருமான வரி ஆடிட்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடிக்கும் முன்பு, தாமதமாக இருந்தாலும் ரிட்டர்ன் தாக்கல் செய்து விடலாம். அப்படி செய்தால் நோட்டீசில் இருந்து தப்பலாம். அப்படியில்லாவிட்டால் நோட்டீசுக்காவது விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் தான் நடவடிக்கை பாயும் என்றும் தெரிவித்தனர்.

ரூ5 லட்சம் வருமானமாஅபராதம் குறைவு தான்
சம்பளதாரருக்கு ஒரு சலுகை இருக்கிறது. அவர்களின் சம்பளம் ஆண்டுக்கு ரூ5 லட்சத்துக்குள் இருந்தால், ரிட்டர்ன் தாக்கல் செய்யாவிட்டால், அபராதம் ஆயிரம் ரூபாய் மட்டும் தான்.    

ரூ3000 க்குள் வரி இருந்தால்  தப்பிக்கலாம்
ரிட்டர்ன் தாக்கல் செய்யாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணியை வருமான வரித்துறை தீவிரமாக செய்து வருகிறது. இதில் பெரும்பாலும், குறைந்தபட்சம் வரி செலுத்தும் நபர்களுக்கு சிக்கல் வராது. ‘குறிப்பாக ரூ. 3000க்குள் வரி கட்டுவோருக்கு நோட்டீஸ் வராது. அவர்கள் மீது நடவடிக்கை பாயாதுஎன்றும் ஆடிட்டர்கள் கூறினர்.
டிசம்பருக்குள் தாக்கல் செய்தாலும் இனி அபராதம்
* இந்தாண்டு டிசம்பர் மாதத்துக்குள்ளாவது ரிட்டர்ன் தாக்கல் செய்து விடலாம். அதற்குள் ேநாட்டீஸ் வரலாம். இருந்தாலும் தாக்கல் செய்ய இனியும் தாமதம் கூடாது.
* அப்படியே டிசம்பருக்குள் தாக்கல் செய்தாலும், அபராதம் ரூ5000 போடப்படும்.
* டிசம்பர் மாதத்திலும் தாக்கல் செய்யாவிட்டால், அபராத தொகை ரூ10,000  ஆக உயரும்.

No comments: