சளி கபம் நோய்க்கு சித்தர்கள் கூறியுள்ள எளிய மருத்துவம்!!! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, October 14, 2018

சளி கபம் நோய்க்கு சித்தர்கள் கூறியுள்ள எளிய மருத்துவம்!!!




தினமும் அதிகாலையில் எழுந்தவுடன்.
மலஜலம் கழித்துவிட்டு பற்களை சுத்தமாக துலக்கிவிட்டு விரல்களால் நாக்கை அழுத்தித் தேய்த்து சுத்தம் செய்ய உணவுக்குழாய் வழியே உள்ளே இருக்கும் பித்தம் முதலில் வெளியேறும். தினமும் அதிகாலையில் தவறாமல் செய்து வர பல்வேறு நோய்கள் தீருவதுடன். சளி சிறிது சிறிதாக குறைந்து கபம் சம்பந்தப்பட்ட நோய்கள் முற்றிலுமாக தீர்ந்துவிடும்.
 
கற்பூரவள்ளி இலை பிடுங்கி வந்து சாறு எடுத்துக் கொள்ளவும் இந்த அளவு நல்லெண்ணெய் எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து நன்றாக சுண்டும் வரை காய்ச்சிக் கொள்ளவும். தலைக்கு குளிக்கும் பொழுது. அரை மணி நேரம் முன்பாக இந்த எண்ணெயைத் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்து வர மூக்கடைப்பு சைனஸ் சளித் தொல்லைகள் அறவே ஒழிந்துவிடும்.

நூறு மில்லி தண்ணீரில் 10 கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து கஷாயம் செய்து அதனுடன் தேன் கலந்து. தினமும் குடித்து வந்தால் ஆஸ்துமா நோய் சிறிது சிறிதாக குறையும்.

No comments: