கல்லூரி சேர்க்கைக்கு புதிய விதிமுறையை அறிவித்தார் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்!
புதுடெல்லி : கல்லூரி சேர்க்கைக்கு புதிய விதிமுறையை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
புதிய விதிமுறையின்படி சேர்க்கைக்கான சான்றிதழ் பிரதிகளை மாணவர்களே சுய கையொப்பமிட்டு அளிக்கலாம்.
உண்மை சான்றிதழ்களை கல்லூரி, பல்கலைக்கழகங்களில் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் கையொப்பமிட்ட சான்றிதழ்களை கல்லூரிகள் ஏற்க வேண்டும் என்றும், சுய கையொப்பமிட்ட சான்றிதழ்களை ஏற்காத கல்லூரியின் இணைப்பு ரத்து செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்
No comments
Post a Comment