Header Ads

Header ADS

வட்டார வள மையங்களில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பள்ளிக்கு மாற்றம்



தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் 413 வட்டார வள மையங்கள் செயல்படுகின்றன
  
*இங்கு மாதம் ரூ.7,700 சம்பளத்தில் 11,191 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 6, 7, 8 வகுப்புகளில் 100 மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு இவர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்
 

*இந்த வகுப்புகளில் 100 மாணவர்கள் இருந்தால் அந்த பள்ளிக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர், ஒரு ஓவிய ஆசிரியர் மற்றும் தையல், இசை,கணிதம், கட்டடக்கலை, ஸ்போக்கன் இங்கிலீஷ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு ஒரு ஆசிரியர் வீதம் மூன்று ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி 6,7,8 வகுப்புகளில் 100 மாணவர்கள் இருந்தால் அந்த வகுப்புகளில் மூன்று பகுதி நேர ஆசிரியர்களை நியமிக்கலாம், என கூறப்பட்டுள்ளது

*இந்த சட்டத்தை பின்பற்றி தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

*இதையடுத்து, வட்டார வள மையங்களில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் அடுத்த வாரம் முதல் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பட்டியல் அனைத்து மாவட்டங்களிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.