Header Ads

Header ADS

அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி ட்ரீட்! தமிழக அரசு புதிய அறிவிப்பு



தமிழகம் முழுவதும் நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட உள்ளது. நவம்பர் 6-ம் தேதி செவ்வாய்க்கிழமை என்பதால் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் திங்கட்கிழமையான நவம்பர் 5-ம் தேதி விடுமுறை எடுத்து தீபாவளியை கொண்டாட முடிவு செய்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து நவம்பர் 5-ம் தேதி திங்கட்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்புகளில் இருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு தீபாவளிக்கு முந்தைய தினமான நவம்பர் 5-ம் தேதி அரசு விடுமுறை என அரசாணை வெளியிட்டுள்ளது.

 
இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முந்தைய தினமான நவம்பர் 5-ம் தேதி திங்கட்கிழமை அரசு விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.
 
அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் இரண்டாவது சனிக்கிழமையான நவம்பர் 10-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது என வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து தொடர்ச்சியாக நான்கு நாள் விடுமுறை கிடைக்கப்போகிறது என்ற மகிழ்ச்சியில் பள்ளி மாணவர்களும் தமிழக அரசு ஊழியர்களும் தீபாவளியை உற்சாகமாக கொண்டாட தயாராகி வருகின்றனர்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.