Header Ads

Header ADS

பலருடைய வீடுகளில் ஏன் செம்பருத்தி செடி இருக்கிறது தெரியுமா?



பொதுவாக வீட்டை சுற்றி பலமரங்கள் மற்றும் செடிகள் நட்டு நல்ல காற்றோட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக வளர்க்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அதில் முக்கியமாக அனைவரது வீட்டிலும் இந்த செம்பருத்தி செடி என்பது கண்டிப்பாக இருக்கும். இப்படி அனைவராலும் இந்த செடி விரும்பி வளர்க்க சில முக்கியமான காரணங்கள் உள்ளன.
 
 
1) செம்பருத்தி இலைகள் நம் உடலுக்கு அதிக குளிர்ச்சியை தருகிறது மேலும் உடல் உஷ்ணத்தை குறைத்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது.

2) செம்பருத்தி இலைகளை அரைத்து சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் காய்ச்சி அந்த எண்ணையை முடியில் தடவி வந்தால் முடி கருமையாக நன்கு வளர தொடங்கும்.

3) சிறுநீர் போகும் போது சிலருக்கு எரிச்சல் வரும். அவ்வாறு இருப்பவர்கள் 4 செம்பருத்தி இலைகளை நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்துவந்தால் சிறுநீர் கடுப்பு பிரச்சனை தீரும்.

4)மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்கள் செம்பருத்தி இலைகளை நிழலில் உலர்த்தி பொடியாக்கி காலை மற்றும் இரவு சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனை சீராகும்.

5) இதய நோயாளிகள் செம்பருத்தி இலைகளை பொடியாக்கி அதைபாலுடன் கலந்து குடித்து வர இதயம் பலம் பெரும்..

செம்பருத்தியின் மருத்துவ குணங்கள் காரணமாக தான் இந்த செடி அனைவராலும் அதிகம் விரும்பி வளர்க்கப்படுகிறது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.