Header Ads

Header ADS

பள்ளிக்கல்வி மேம்பாட்டிற்கு ஸ்டுடியோ மற்றும் புதிய சேனல் ஆரம்பிக்கப்படும் :பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்



பள்ளிக்கல்வித்துறைக்கென தொலைக்காட்சி சேனல் உருவாக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே புஞ்சை துறையம்பாளையத்தில் துணை மின் நிலையத்தை அவர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன்,  புதிய சேனலில், பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். இதில் பள்ளிக்கல்வியில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அதில் ஔிபரப்பப்படும் அதேபோல் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஸ்டியோ  உருவாக்கப்பட்டு அதில் சிறந்த கல்வியாளா்களை கொண்டு தினமும் இரண்டு மணிநேரம் கல்வி ஔிபரப்பப்படும்.
தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் முதல்வா், துணை முதல்வா் ஆகியோர் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகின்றனா். மின் தடையில்லா மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தற்போது அணைகள் மற்றும் நீா் நிலைகள் நிரம்பியுள்ளதே சிறப்பான ஆட்சி நடக்கிறது என்பதற்கு சாட்சி ஆகும். மழலையா் பள்ளிகள் எட்டாம் வகுப்புவரை உள்ள நடுநிலைப்பள்ளிகளில் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு வழங்கப்படும் டேப்பில் பாடங்ளை பதிவிறக்கம் செய்து செல்லும் இடங்களில் படிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதுஎன கூறினார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.