Header Ads

Header ADS

அரசுப்பள்ளிகளில் பணிசெய்யும் துப்புரவு பணியாளர்களுக்கு, குறைவான ஊதியத்தை அரசு அதிகரிக்க வேண்டும்



அரசுப்பள்ளிகளில் பணிசெய்யும் துப்புரவு பணியாளர்களுக்கு, குறைவான ஊதியம் வழங்கப்படுவதால், பணிகள் பாதிக்கப்படுகிறது.உடுமலை, கல்வி மாவட்டத்திலுள்ள அரசு துவக்கம் முதல், மேல்நிலை வரை உள்ள பள்ளிகளில், தற்காலிகமாக துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

கிராம ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளுக்கு, கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் மூலமாகவும், நகரிலுள்ள பள்ளிகளுக்கு நகராட்சி நிர்வாகத்தின் சார்பிலும் ஊதியம் வழங்கப்படுகிறது. பள்ளி வளாகம், கழிப்பறை மற்றும் வகுப்பறையை துப்புரவு பணியாளர்கள் துாய்மையாக பராமரிக்க வேண்டும்.துவக்கம் முதல் மேல்நிலை வரை, துப்புரவு பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ஆயிரத்தில் துவங்கி, அதிகபட்சமாக, 2,500 ரூபாய் வரை மட்டுமே ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


பணிகள் அதிகளவில் இருப்பினும், குறைந்த பட்ச ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதால், பணியாளர்கள் தொடர்ந்து பணிக்கு வருவதில்லை. அவர்களுக்கான ஊதியமும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.தற்போது தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், பணியாளர்களின் இலக்கை அதிகரிக்க, தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வேலை உறுதித்திட்ட பணியாளர்களுக்கு, ஒரு நாளுக்கான ஊதியம், 224 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இதனால், பள்ளிகளில் துப்புரவு தற்காலிக துப்புரவு பணியாளர்களாக இருப்பவர்கள், வேலை உறுதி திட்டப்பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்


பள்ளிகளின் துாய்மையை தொடர்ந்து பராமரிக்கவே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.குறைவான ஊதியம் வழங்கப்படுவதால், பல பள்ளிகளில் பணியாளர்கள் பெயரளவில் மட்டுமே பணி செய்கின்றனர். திட்டத்தை பயனுள்ளதாக மாற்ற, ஊதியத்தை அரசு அதிகரிக்க வேண்டும்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.