பாலுடன் துளசி சேர்த்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள் ..!! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, October 26, 2018

பாலுடன் துளசி சேர்த்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள் ..!!



நம் அன்றாட வாழ்வில் தினமும் காலையில் பால் அல்லது காபி போன்றவற்றை குடிப்பது வழக்கம். பாலில் அதிக அளவிலான கால்சியம் நிறைந்துள்ளது. அதே போல துளசி செரிமான பிரச்சனை மற்றும் சுவாச பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கும். பாலுடன் துளசி சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்
பாலுடன் துளசி சேர்த்து குடித்தால் காய்ச்சலை வேகமாக குணமாக்க முடியும். மேலும் இந்த கலவை இதயத்திற்கு தேவையான ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது.
 
இதமான சூடுள்ள பாலில் துளசி சேர்த்து குடித்தால் மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய ஹார்மோன்கள் கட்டுப்படுத்தப்படுத்தி பதட்டம், மன அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கும்.
இவை இரண்டும் சேர்ந்த கலவை சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுவதை தடுக்கும்.

மேலும் ஏற்கனவே இந்த பிரச்சனை இருந்தால் அதை குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக்கி அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், சளி, தொண்டை கரகரப்பு போன்றவற்றை சரி செய்கிறது. மேலும் புற்று நோய் செல்கல் உருவாகமல் தடுக்கிறது.
தலைவலிக்கு என்ன தான் மருந்து எடுத்தும் பயனில்லையா? பாலுடன் துளசி சேர்த்து குடித்தால் தலைவலி குறைவதை கண் கூடாக பார்க்க முடியும்.

No comments: